scorecardresearch

வெளிநாடு சுற்றுப்பயணத்தி்ல் அஜித் : ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோஸ் வைரல்

கிளாஸ்கோவில் உள்ள தமிழ் சினிமா ரசிகர் ஒருவர் ஸ்காட்லாந்து நகரில் அஜித்தை சந்தித்த அனுபவத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வெளிநாடு சுற்றுப்பயணத்தி்ல் அஜித் : ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோஸ் வைரல்

துணிவு படம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் நடிகர் அஜித், மீண்டும் குடும்பத்துடன் ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே துணிவு படம் திரைக்கு வருவதற்கு முன்பு, அஜித் தனது பைக்கில் ஐரோப்பாவின் பல பகுதிகளை சுற்றி வந்தார், தற்போது படத்தின் வெளியீட்டுக்கு பிறகு மீண்டும் ஐரோப்பாவை சுற்றி வருகிறார்.

அஜித் நடிப்பில் பெங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான படம் துணிவு. வங்கி கொள்ளை மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்ட துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வசூலில் பெரிய சாதனை படைத்து வருகிறது. இந்த படம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் நடிகர் அஜித் தற்போது வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

முன்னதாக, அவரது மனைவி ஷாலினி, போர்ச்சுகலில் இருந்து அஜித்தின் படத்தைப் பகிர்ந்துள்ளார். தற்போது ட்விட்டரில் ரசிகர் ஒருவர் அஜித் கிளாஸ்கோவில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ட்விட்டர் பதிவில், ரசிகர் ஒருவர் ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் உள்ள ஒரு காபி ஷாப்பில் அஜித்தை சந்தித்ததாகவும், ஒரு ஓட்டலில் டீ குடித்துக்கொண்டிருந்த போது அவரது நண்பர்கள் அஜித்தை சந்திக்க அழைத்துள்ளனர்.

அப்போது உடனடியாக அவருக்கு பிடித்தமாக நடிகரை சந்திக்க விரைந்து சென்றதாகவும்,. அவர்களையெல்லாம் கவனித்த அஜித், புகைப்படம் எடுப்பதற்காக ஓட்டலுக்கு வெளியே தன்னை சந்திக்குமாறு கூறியுள்ளார். அப்போது அஜித்தின் மேனேஜர் ஒரு படத்தை மட்டும் க்ளிக் செய்தபோது, மேலும் சில படங்களை எடுக்குமாறு நடிகர் அஜித் கூறினார். அப்போது அஜீத்திடம் அவரது அடுத்த படம் பற்றி கேட்கப்பட்டது, சிறிது நேரம் ‘பிரேக் வேண்டும்’ என்று பதிலளித்தார்.

பின்னர் அவர்களை நன்றாக படிக்குமாறு கூறிவிட்டு சென்றதாக பதிவிட்டுள்ளார். அஜித் ஐரோப்பாவில் தனது ஓய்வு நேரத்தை செலவிடுவதாக தோன்றினாலும், அவரது அடுத்த படத்தை பற்றி அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆரம்பத்தில், விக்னேஷ் சிவன் தனது அடுத்த படமான ஏ.கே.62 இன் இயக்குனராக உறுதி செய்யப்பட்டார்.ஆனால், அஜீத் திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்ய விரும்பியதால் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘கலக தலைவன்’ படத்தை இயக்கிய மகிழ் திருமேனி அஜித்தின் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், வெங்கட் பிரபுவும் ஏ.கே.62 படத்திற்காக அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் உள்ளன. அஜித் ஏ.கே 62 படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Fan narrates experience of crossing paths with ajith kumar in glasgow