/indian-express-tamil/media/media_files/q5bkyj7n1QGFCxn49Xvm.jpg)
சூர்யாவன் புதிய தோற்றம்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் புதிய புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், படம் குறித்து எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படத்தை இயக்கிய சிறுத்தை சிவா தற்போது சூர்யா நடிப்பில், கங்குவா என்ற படத்தை இயக்கி வருகிறார். வரலாற்று பின்னணி கொண்ட இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகின்றனர். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா பெரும் பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
சூர்யா நடிப்பில் இதுவரை இல்லாத பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தின் டைட்டில் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், சற்று விமர்சனங்களையும் சந்தித்தது, ஆனாலும் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
சமீபத்தில் பாபி தியோலின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படத்தில் அவருக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது சூர்யாவின் புதிய புகைப்படம் ஒன்றை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கங்குவாவின் சாரத்தைப் படம்பிடிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் படப்பிடிப்பு முடிந்தபின் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
Capturing the essence of our #Kanguva 🦅
— Studio Green (@StudioGreen2) January 31, 2024
Post shoot photoshoot @Suriya_offl@directorsiva@GnanavelrajaKe@avigowariker@kabilanchelliah#SerinaTixeirapic.twitter.com/Hqk2VwsgTH
சமீபத்தில் கங்குவா படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த படத்தில் சூர்யா ஒரு தோற்றத்தில் பழங்குடியின மன்னராக சூர்யா காணப்படுவதால், இப்படம் சமகாலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையில் நடக்கும் கதை என்று தெரிகிறது. அதே சமயம் இது ஒரு கற்பனைத் திரைப்படமா அல்லது வரலாற்றுப் புனைகதையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை,
இருப்பினும், தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா படத்தின் மீது நம்பிக்கை வைத்து, உலகம் முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட மொழிகளில் டப் செய்ய திட்டமிட்டுள்ளார். கங்குவா படத்தை தொடர்ந்து, நீண்ட நாட்களாக தள்ளிப்போன வாடி வாசல் படத்தை முடிக்க சூர்யா அடுத்து வெற்றிமாறனுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து விக்ரமில் இருந்து ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் உருவாகும் படத்தின் லோகேஷ் கனகராஜுடன் இணைவதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.