scorecardresearch

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற மாஸ்டர் : பிரபலங்கள் பரபரப்பு ட்விட்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியான மாஸ்டர் திரைப்டம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற மாஸ்டர் : பிரபலங்கள் பரபரப்பு ட்விட்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ‘தளபதி’ விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை மாஸ்டர் பொங்கல் என கொண்டாடி வரும் விஜய் ரசிகர்கள் அதிகாலை 5 மணியிலிருந்து மாஸ்டர் படம் பார்க்க தியேட்டர்களில் வரிசை கட்டி காத்திருந்தனர்.

தற்போது இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் மாஸ்டர் படம் குறித்து  சமூக வளைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில்,  திரைப்பட விநியோகஸ்தரும், மல்டிபிளக்ஸ் உரிமையாளருமான ராஜ் பன்சால், மாஸ்டர் திரைப்படத்தை பார்ப்பதற்காக அதிகாலையில் இருந்து ரசிகர்கள் கூட்ட நேரிசலுக்கு இடையில் ரசிகர்கள் காத்திருந்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளர்ர்.

அவர் தனது பதிவில், “அதிகாலையில் மாஸ்டர் படம் பார்க்க இந்தியா முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. @actorvijay # மாஸ்டர். இந்த படம் இந்தியன் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கும் # தளபதிவிஜய் என பதிவிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் மாஸ்டர் படம் வெளியாகும் தியேட்டர்களில் இருந்து விஜயின் ரசிகர்கள் பல வீடியோக்களும் புகைப்படங்களும், படத்தின் வெளியீட்டை கொண்டாடும் வகையில், நடனமாடி மகிழ்வதும், கட்டவுட்டிற்கு‘பால் அபிஷேகம்’ செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த படத்தில் நடித்த நாயகி மாளவிகா மோகனன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோர் படக்குழுவினருடன் முதல் கட்சியை கண்டு ரசித்தனர். இந்நிலையில், மாஸ்டர் படத்தில் வரவேற்பு குறித்து ரோகிணி சில்வர் ஸ்கிரீன்ஸின் நிர்வாக இயக்குனர் ரேவந்த் சரண் தனது ட்விட்டர் பதிவில், “பிளாக்பஸ்டர் <மெகா பிளாக்பஸ்டர் <இண்டஸ்ட்ரி ஹிட் <மாஸ்டர் !!! என பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து எல்.எம் தியேட்டரில் மாஸ்டர் படத்தை பார்த்த திரைப்பட ஆர்வலர் கவுசிக், “தனது அறிமுகத்திலிருந்து  இன்று வரை தனது ரசிகர்களுக்கு வரம்பற்ற சிலிர்ப்பான தருணங்களை கொடுக்கிறர் # தளபதி விஜய் என பதிவிட்டுள்ளார்.  தளபதி விஜய் தனது ஸ்டைல், நடிப்பு, உடலமைப்பு மூலம் ரசிகர்களுக்கு வரம்பற்ற மகிழ்ச்சியை கொடுக்கிறார். @actorvijay தனது நடிப்பின் மூலம் மேலும் ஒரு வெற்றியை பெற்றுள்ளார் @ விஜய்சேதுபதி அழகான தோற்றம், இமேஜ் பார்க்காமல் நடித்து தன்னை நிரூபித்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.

திரைப்பட வர்த்தக ஆய்வாளர் சதீஷ்குமார் எம், மாஸ்டர் படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது, இதில் தளபதி விஜய்க்கு நிறைய சண்டைக் காட்சிகள்” உள்ளன என படத்தின் முதல் பாதியைப் பார்த்த பிறகு, ட்வீட் செய்துள்ளார், மேலும் # மாஸ்டர் படத்தில், படங்களிள் ஏராளமான குறிப்புகளைக் காண முடிந்தது. இந்த படத்தில் # சூரியா & # தல குறிப்பு உள்ளது. # தளபதி பேராசிரியராக வரும் கல்லூரி காட்சிகள் இன்னும் சிறப்பாக அமைப்பக்கபட்டிருக்கலாம. இரண்டாவது பாதியில் # தளபதி vs # வி.ஜே.எஸ் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மாஸ்டர் படத்திற்காக ரசிகர்களின் முன்பதிவு, பாக்ஸ் ஆபிஸில் அதன் நல்ல தொடக்கத்தை சுட்டிக்காட்டுகிறது. மேலும் அதிகப்படியான விஜய் ரசிகர்கள், மாஸ்டருக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, கொரோனா தொற்றையும் பொருட்படுத்தாமல், சென்னையில் திரையரங்குகளில் திரண்டனர். ரசிகர்களின் வரவேற்பால், மாஸ்டர் படம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இருண்டு கிடந்த இந்திய பாக்ஸ் ஒளிரச்செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Fans give positive response for vijay master movie