நடிகை நயன்தாரா, ஷாருக்கான் உடன் நடித்த ஜவான் படத்தின் டிரெய்லரை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு புரோமோஷன் செய்த நிலையில், அவர் ஜெயம் ரவி உடன் நடித்த இறைவன் படத்திற்கு ஏன் புரோமோஷன் செய்யவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இயக்குநர் அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் இறைவன். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
ஜெயம் ரவி - நயன்தாரா நடித்துள்ள இறைவன் படம் பல ஆண்டுகளாக உருவாகி வருகிறது. இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை என்றாலும், தற்பொது வெளியாகியுள்ள அந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்பை கூட்டியுள்ளது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கிறார்.
நடிகை நயன்தாரா அண்மையில் ஜவான் படத்திற்கு இன்ஸ்டாகிராமில் புரமோஷன் செய்தார். ஆனால், நயன்தாரா நடித்துள்ள ஜெயம் ரவியின் இறைவன் படத்தின் ட்ரெய்லரை மட்டும் ஏன் புரமோட் செய்யவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், நடிகை நயன்தாரா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு மட்டும் வருகிறார். மற்ற திரைப்படங்களின் புரமோஷனுக்கு செல்வதில்லை என்றும் விமர்சித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்ல, பாலிவுட் பாக்ஸ் ஆஃபீஸ் கிங் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து தனது ஜவான் படத்தின் புரமோஷனுக்காக மேடையில் அனிருத்துடன் ஆட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். ஆனால், நடிகை நயன்தாரா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை
துபாய் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறும் ஜவான் புரமோஷனிலும் பங்கேற்க முடியாத சூழலில் திடீரென இன்ஸ்டாகிராமில் கணக்கை ஆரம்பித்த நயன்தாரா அந்த படத்தின் டிரெய்லரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு புரமோட் செய்திருந்தார்.
ஆனால், ஜெயம் ரவியின் இறைவன் டிரெய்லரை நயன்தாரா புரமோட் செய்யவில்லை என்பதை அறிந்த நெட்டிசன்கள் ஷாருக்கான் படத்துக்கு புரோமோஷன் செய்யும் நயன்தாரா, ஜெயம் ரவியின் இறைவன் படத்துக்கு புரோமோஷன் செய்யாதது ஏன் என்றுகேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இறைவன் டிரெய்லரில் நயன்தாரா போர்ஷன் சுமாராக இருப்பதாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“