Advertisment
Presenting Partner
Desktop GIF

சொன்னதுபோலவே நடந்துடுச்சு... பால் பாக்கெட்டுகளை அபேஸ் செய்த 'வலிமை' ரசிகர்கள்!

வலிமை ரிலீஸ்; அஜித் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய பால் பாக்கெட்டுகளை திருடிய ரசிகர்கள்

author-image
WebDesk
New Update
பரோட்டாவுக்கு மாவு பிசைவது போல் அஜித் டான்ஸ் இருக்கிறதா? விமர்சன சர்ச்சை

Fans theft milk from van for Valimai celebration: வலிமை படத்திற்காக ரசிகர்கள் பால் பாக்கெட்டுகளை திருடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷ்ங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலிவுட் நடிகை ஹூமா குரேசி அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் டோலிவுட் நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார்.

இந்தநிலையில் படம் இன்று வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தினை பார்த்து வருகின்றனர். படம் வெளியாகும் முன் அஜித் ரசிகர்கள் மேளம் தாளம், பாட்டு, நடனம் என்று கொண்டாடினர். ஒரு சில இடங்களில் அஜித் மற்றும் போனி கபூருக்கு பால் அபிஷேகமும் செய்யப்பட்டது. தஞ்சாவூரில் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

இதையும் படியுங்கள்: Valimai Review Live Updates: வலிமை படம் வெற்றி பெற பிரபலங்கள் வாழ்த்து

இந்தநிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தின் கட்-அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்வதற்காக ரசிகர்கள் பால் பாக்கெட்டுகளை திருடியுள்ளதாக அந்த வீடியோ வெளியாகியுள்ளது.

முன்னதாக, வலிமை திரைப்படத்தின் முதல் நாள் காட்சிகளுக்காக, ரசிகர்கள் அஜித்தின் கட்-அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்ய, பால் பாக்கெட்டுகளை திருடலாம் என பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை செய்திருந்தது. இருப்பினும் ரசிகர்கள் பால் பாக்கெட்டுகளை திருடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Actor Ajith Valimai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment