Advertisment

பெண் வேடமிட்டு தியேட்டர் வந்த இயக்குனர்: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

இயக்குனர் ஒருவர் பெண் வேடத்தில் தியேட்டர் வந்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajasenan visits theatre wearing saree

பெண் வேடமிட்டு தியேட்டர் வந்த இயக்குனரை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கேரளாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக ராஜசேனன் திகழ்கிறார். இவர் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பின்னர் ஞானும் பின்னொரு ஞானும் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் தியேரட்டர்களில் வெளியான நிலையில், கொச்சியில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு பெண் வேடம் அணிந்து சென்றார்.

Advertisment

அவரை ரசிகர்கள் எளிதில் கண்டுபிடித்துவிடல்லை. அதாவது அச்சு அசல் பெண் போன்றே காணப்பட்டார். கடைசியில் இது பெண் அல்ல, இயக்குனர் என தெரிந்ததும் ரசிகர்கள் முதல் திரைக் கலைஞர்கள் வரை அதிர்ச்சியில் பிரமித்துப் போனார்கள்.

ராஜசேனன் கதாநாயகன், டார்லிங் டார்லிங் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். இவர் அண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பின்னர் விலகிவிட்டார். தற்போது மீண்டும் படங்களை இயக்க கவனம் செலுத்திவருகிறார்.

ஞானும் பின்னொரு ஞானும் திரைப்படத்தில் ராஜசேனன், சுதீர் கரமனா, ஜோய் மேத்தீவ், இந்திராஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment