scorecardresearch

நயன்தாரா நெற்றியில் குங்குமம்.. திருமண வாழ்த்து கூறும் ரசிகர்கள்.. வைரல் வீடியோ!

நயன்தாரா நெற்றியில் குங்குமம் அணிந்து, விக்னேஷூடன் வரும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள்’ நயனுக்கும், விக்கிக்கும் திருமணம் முடிந்து விட்டதா? என அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Nayanthara
vignesh shivan wishes Nayanthara father a happy birthday Instagram post viral

கேரள மாநிலம், திருவல்லாவின் சிறிய ஊரில் இருந்து வந்த நயன்தாரா இன்று தென்னிந்திய திரையுலகையே ஆண்டு வருகிறார்.  சத்யன் அந்திகாட் இயக்கிய 2003 ஆம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ திரைப்படத்தின் மூலம்’ மலையாள சினிமாவில், நயன்தாரா அறிமுகமானார். பிறகு தமிழ், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான கதாநாயகியாக உயர்ந்தார். அதன்பின்னர் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் பின்னடைவை சந்தித்த நயன்தாரா, அதிலிருந்து மீண்டு வந்து’ ஒரு ராணி போல இப்போது திரையுலகில் ஆட்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன்’ சமீபத்தில் சென்னை பாரிமுனையில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்களுடன்’ நயன்தாரா புகைப்படம் எடுத்தார்.

மேலும் அங்கு ஏற்கெனவே சாமி தரிசனம் செய்ய வந்த’ சென்னை மெயர் பிரியா ராஜனையும், நயன்தாரா சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியது.

இதில் முக்கியமான செய்தி என்னவென்றால், விக்கியும், நயன்தாராவும் கோயிலில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள், இருவருக்கும் திருமண வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

அப்படியானால் நயனுக்கும், விக்கிக்கும் ஏற்கெனவே திருமணம் முடிந்து விட்டதா? என பல ரசிகர்களும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதற்கு காரணம், அந்த வீடியோவில்’ நயன் தனது நெற்றியில் குங்குமம் வைத்திருப்பது தான்.

வீடியோவில்’ நயன்தாராவை பார்த்த ரசிகர்கள், செல்ஃபி எடுக்க கூட்டமாக குவிந்ததும், அவர்களை சமாளிக்க முடியாமல்’ விக்கி தனது கைகளால் நயன்தாராவை பாதுகாப்பாக காருக்கு அழைத்து செல்கிறார். இந்த குழப்பங்களுக்கு மத்தியில், நயன்தாராவும் சிரித்துக்கொண்டே ரசிகர்களை பார்த்து கை அசைக்கிறார்.

வீடியோவை பார்த்த ரசிகர்கள்’ நயன்தாரா நெற்றியில் குங்குமம். அடடா சூப்பர் எனவும், “ஹேப்பி மேரேஜ் லைஃப், “அழகான ஜோடி கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என நயனையும், விக்கியையும் வாழ்த்தி வருகின்றனர்.

ஆனால் கோயிலிலுக்கு செல்லும் பெண்கள், திருமணம் ஆகாதவர்கள் உட்பட  இதுபோல குங்குமம் வைப்பது சாதரணமானது தான். அதனால் திருமணம் முடிந்து விட்டது என்று அர்த்தம் அல்ல என பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நயன்தாரா, விக்கி கூட்டணியில் அடுத்த படமான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ளனர்.

விக்கி இயக்கும் நான்காவது படம் இதுவாகும். அவர் கடந்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸின் தமிழ் தொகுப்பான பாவ கதைகளில் ஒரு பகுதியை இயக்கியிருந்தார்.

முன்னதாக’ நயன்தாராவும், விக்கியும்’ புதிய கார் வாங்கிய நிலையில், பல்லவன் இல்லம் அருகேயுள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Fans wish nayanthara a happy married life video viral