22 வயதில் ஒரு லேடிக்கு அக்கா; ஆனா நான் ஊமை கேரக்டர்; பலரும் அறியாத ஃபரினா ஆசாத் ஃபர்ஸ்ட் சீரியல் இதுதான்!
நடிகை ஃபரீனா ஆசாத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தாலும், தற்செயலாகவே நடிப்பின் மூலம் பிரபலமானதாகவும் கூறியுள்ளார்.
நடிகை ஃபரீனா ஆசாத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தாலும், தற்செயலாகவே நடிப்பின் மூலம் பிரபலமானதாகவும் கூறியுள்ளார்.
நடிகை ஃபரீனா ஆசாத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தாலும், தற்செயலாகவே நடிப்பின் மூலம் பிரபலமானார். இருப்பினும், நடிப்புத் துறையில் அவர் சந்தித்த சுவாரசியமான அனுபவங்களைப் பற்றி டேட் வித் அசார் யூடியூப் சேனலில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
Advertisment
நடிப்புத் துறையில் நுழைவது குறித்து ஃபரீனா முதலில் மறுப்புத் தெரிவித்திருக்கிறார். குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு அஞ்சி, நடிகையாக ஆக மாட்டேன் என்று கூறியுள்ளார். பல நடிப்பு வாய்ப்புகளை மறுத்த பின்னரே, எதிர்பாராமல் ஒரு தொடரில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
ஆனாலும், எதிர்பாராமல் தற்செயலாகவே அவர் நடிக்கத் தொடங்கியுள்ளார். இது அவருக்கு மிகப்பெரிய வெற்றி தந்தது என்று அவர் கூறினார். ஆனால், நடிப்பு ஒருபோதும் அவருடைய விருப்பமான துறையாக இருந்ததில்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.
அவர் தனது முதல் தொடர் அனுபவத்தைப் பற்றிப் பேசுகையில், 22 வயதில் ஒரு கலர்ஸ் தமிழ் தொடரில் ஒரு மூத்த சகோதரி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதை நினைவுகூர்ந்தார். இது அவருக்கு அநீதியானதாகத் தோன்றியதாகவும் அவர் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார். இருப்பினும், இந்த அனுபவமே அவரது நடிப்பு வாழ்க்கையின் தொடக்கமாக அமைந்தது என்றார். எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் நான் அந்த கதாப்பாத்திரத்தில் ஊமையாக நடித்து இருப்பேன் என்றும் கூறினார்.
Advertisment
Advertisements
நடிப்பு தனது விருப்பமான துறை இல்லை என்றாலும், பாரதி கண்ணம்மா தொடரில் 'வெண்பா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார். ஆனாலும், தொகுப்பாளராக வேண்டும் என்ற ஆசையுடன், விஜய் டிவியில் தனக்கான ஒரு பெரிய வெற்றி நிகழ்ச்சி கிடைக்கும் என்று அவர் இன்றும் காத்திருப்பதாக கூறினார்.
தான் ஒரு நடிகையாக ஆவதற்கு ஒருபோதும் திட்டமிடவில்லை என்றும், ஆரம்பத்தில் பல நடிப்பு வாய்ப்புகளை நிராகரித்ததாகவும் ஃபரினா கூறுகிறார். இதில் "சந்திரலேகா" தொடரில் முக்கிய கதாபாத்திரமும் அடங்கும். வேலையில்லாத ஒரு காலகட்டத்தில், அவர் "பாரதி கண்ணம்மா" தொடரில் வெண்பா கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் சில வாரங்களுக்கு மட்டுமே நடிக்க திட்டமிட்டிருந்த அவர், அந்தக் கதாபாத்திரம் மிகவும் பிரபலமானதால் ஆறு வருடங்கள் தொடர்ந்தார்.
அவர் தொகுத்து வழங்குவதில் தனக்கு இருந்த ஆர்வத்தையும், விஜய் டிவியில் பல பைலட் நிகழ்ச்சிகள் செய்தும் நிரந்தர தொகுப்பாளர் வாய்ப்பு கிடைக்காதது குறித்தும் வருத்தம் தெரிவித்தார். தனக்கு வந்த பல நிகழ்ச்சிகள் இறுதியில் ஆண் தொகுப்பாளர்களுக்குச் சென்றதாகவும் குறிப்பிட்டார்.