Farina Azad latest Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முன்னணி சீரியலாக ‘பாரதி கண்ணம்மா’ வலம் வருகிறது. அதிலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் எபிசோடுகள் அனைத்தும் பரபரப்போடு உள்ளதால் டிஆர்பியில் முதல் இடத்தில உள்ளது. இந்த சீரியலை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இதில் தோன்றும் காதாபாத்திரங்கள் பற்றி சொல்ல தேவையில்லை. குறிப்பாக வில்லியாக வரும் வெண்பா குறித்து விவரிக்க வேண்டியதில்லை. அந்த அளவிற்கு வில்லத்தனமான கதாபாத்திரங்களில் ஒன்றாக இது உள்ளது.

ரசிகர்களின் குமுறலையும், திட்டையும் வாங்கும் இந்த வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை ஃபரீனா ஆசாத் நடித்து வருகிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமாகிய இவரை தற்போது திட்டுவதை ரசிகர்கள் தவிர்க்க தொடங்கியுள்ளனர். ஏனென்றால், இவர் இந்த சீரியலில் வில்லி வேடத்தில் நடிக்கும் போதுதான் இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி வந்தது. தன்னை இத்தனை நாள் திட்டியவர்கள் இப்போது வாழ்த்துகிறார்களே என அவரே ஒரு முறை எமோஷ்னல் ஆகி இருந்தார்.

ஃபரீனா கர்ப்பமான பிறகு விதவிதமான போட்டோ ஷுட்டாக நடத்தி வருகிறார். இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலான நிலையில், அதற்கு அவரது ரசிகர்களுள் சிலர் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் சிலரோ தங்கள் மோசமான கமெண்டுகளை பதிவிட்டிருந்தனர். தொடர்ந்து அவர் நடத்திய பல போட்டோஷூட்களுக்கு இதே போன்ற கலவையான விமர்சனங்களை பெற்றார்.

குறிப்பாக தண்ணீருக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோஷூட்க்கு கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இதேபோல் கர்ப்பமான வயிற்றில் மருதாணி வைத்து வித்யாசமாக எடுக்கப்பட்ட போட்டோஷூட்க்கு ரசிகர்கள் திட்டி தீர்த்தனர். ஆனால், இதை பற்றியெல்லாம் கவலைப்பட ஃபரீனா, தொடர்ந்து தனது pregnancy போட்டோ ஷூட்டை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ரசிகர்களுடன் அவர் சமீபத்தில் இன்ஸ்டாவில் கலந்துரையாடிய போது ஒருவர், ‘வயிற்றை காட்டி போட்டோ ஷுட் நடத்த வேண்டாம்’ என்று கூறினார். இதற்கு அவர், ‘நம்மை சுற்றி நல்ல உள்ளங்களும், நல்ல எண்ணமும் இருந்தால் எப்போதும் ஒன்றும் ஆகாது’ என்று கூறியுள்ளார். மேலும், மற்றொருவர் ‘ஒரு நாளைக்கு 5 முறை தொழுகுரீங்களா ?’ என்று கேட்டற்கு, நான் தினமும் யோகா செய்வேன் என்று கூறியுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil