‘நான் பிரக்னன்ட்… வெண்பா பிரக்னன்ட் இல்லையே..!’ பாரதி கண்ணம்மா புதுக் குழப்பம்

Farina azad talks about quitting barathikannamma serial as venba: விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா கேரக்டரில் நடிக்கும் ஃபரினா கர்ப்பம்; சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா? வீடியோ மூலம் விளக்கம்

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலின் வில்லி வெண்பா சீரியலை விட்டு விலகப்போவதாக தகவல் வெளியான நிலையில், வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார் ஃபரினா.

விஜய் டிவி சீரியல்களிலே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உள்ள சீரியல் பாரதி கண்ணம்மா. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் முன்னிலையில் உள்ளது. இதில் அருண், ரோஷினி, ஃபரினா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலில், வில்லி வெண்பாவாக நடித்து வருபவர் ஃபரினா. கல்யாணமான ஹீரோ பாரதியை ஒரு தலையாக காதலிக்கும் டாக்டர் வெண்பா கதாப்பாத்திரத்தில் ஃபரினா நடித்து வருகிறார். தன் காதலை அடைவதற்காக வெண்பா எடுக்கும் வில்லத்தனமான முயற்சிகள் சீரியலை சுவாரஸ்யாக கொண்டு செல்கிறது.

ஃபரினா, ரஹ்மான் உபாயத் என்பரை கடந்த 2017 ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்த நிலையில் இந்த தம்பதிகள் விரைவில் பெற்றோர்கள் ஆக போகிறார்கள். சமீபத்தில், தான் 7 மாத கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஃபரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்தார்.

ஃபரினா கர்ப்பமாக உள்ளதால் அவர் சீரியலில் இருந்து விலகுவாரா? அவருக்கு பதில் யாரேனும் நடிக்கவுள்ளார்களா? அல்லது கதையில் ஏதேனும் மாற்றம் செய்யப்போகிறார்களா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. இந்த நிலையில் இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில், ஃபரினா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ”ஃபரினா பிரக்னண்ட், வெண்பா பிரக்னண்ட் இல்ல, சீரியலில் வெண்பா கேரக்டர் கண்டிப்பாக இருக்கும், அதைப் பண்ணப்போறது ஃபரினா தான். யாரும் கவலைபட வேண்டாம். கண்டிப்பான நா முடிஞ்ச அளவுக்கு சீரியலில் தொடர்ந்து நடிக்கப் போறேன். வெறித்தனமான வெண்பா கேரக்டர் கண்டிப்பா பண்ணப்போறேன். எல்லாரும் ப்ரேக் எடுத்துட்டிங்களானு கேக்குறாங்க, ஆனா எனக்கு தொடர்ந்து நடிக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்ல”, என ஃபரினா விளக்கமளித்துள்ளார். இதன் மூலம் ஃபரினா சீரியலில் தொடர்ந்து நடிப்பார் என தெரிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Farina azad talks about quitting barathikannamma serial as venba

Next Story
Tamil Serial Rating : இவங்க அலப்பற தாங்க முடியல சாமி… பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு இப்படி ஒரு நிலையா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com