Actress Farina Azad viral photo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முன்னணி சீரியலாக ‘பாரதி கண்ணம்மா’ வலம் வருகிறது. அதிலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் எபிசோடுகள் அனைத்தும் பரபரப்போடு உள்ளதால் டிஆர்பியில் டாப் 3 இடங்களை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு வெண்பா குறித்து சொல்லவே தேவையில்லை. ஏனென்றால், இந்த சீரியலில் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று. எனவே இந்த கதாபாத்திரத்தை திட்டி தீர்க்காத சீரியல் ரசிகர்களே இருக்க மாட்டார்கள்.

இந்த திட்டுகளையெல்லாம் வாங்கும் வெண்பா கதாபாத்திரத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளினி ஃபரீனா ஆசாத் நடிக்கிறார். இந்த சீரியலின் முன்னணி வில்லியாக வலம் வரும் இவர் கர்ப்பமாக உள்ளார் என்ற செய்தி அறிந்து திட்டுவதை ரசிகர்கள் தவிர்க்க தொடங்கினர். அதோடு அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இத்தனை நாள் திட்டியவர்கள் தன்னை வாழ்த்துகிறார்களே என அவரே எமோஷ்னல் ஆகி இருந்தார்.

ஃபரீனா கர்ப்பமான பிறகு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலான நிலையில், அதற்கு அவரது ரசிகர்களுள் சிலர் வாழ்த்து தெரிவிதத்தினர். ஆனால் சிலரோ தங்கள் மோசமான கமெண்டுகளை பதிவிட்டிருந்தனர். தொடர்ந்து அவர் நடத்திய போட்டோஷூட்களுக்கும் இதே போன்ற கலவையான விமர்சனங்களை பெற்றார். குறிப்பாக தண்ணீருக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோஷூட்-க்கு நிறையவே விமர்சிக்கப்பட்டார். இருப்பினும், ஃபரீனா கமெண்டுகளுக்கு பதிலடி கொடுத்து இருந்தார்.

இந்நிலையில், pregnancy போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் ஃபரீனா. இதில் அவரது கணவர் உடன் சேர்ந்து இருக்கும் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். கணவருடன் சேர்ந்து முதல் முறையாக போட்டோஷூட் எடுத்த புகைப்படங்களை ஃபரீனா வெளியிட்டுள்ளதால் அதற்கு லைக்ஸ் மழை பொழிந்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். மேலும், அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த புகைப்படங்கள் இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil