Farina Azad dancing for Samantha’s o solriya mama oo oo solriya mama samantha item song Tamil News: 'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ள நடிகை ஃபரினாவின் இன்ஸ்டா வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
Farina Azad dancing for Samantha’s o solriya mama oo oo solriya mama samantha item song Tamil News: 'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ள நடிகை ஃபரினாவின் இன்ஸ்டா வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
Farina Azad Tamil News: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ உள்ளது. தற்போது ப்ரைம்டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் சமீபத்திய எபிசோடுகள் அனைத்தும்விறுவிறுப்பு கலந்த பரபரப்போடு உள்ளதால் கடந்த வார டிஆர்பியில் டாப்-5 இடங்களுள் வந்தது.
Advertisment
இந்த சீரியலை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இதில் தோன்றும் காதாபாத்திரங்கள் பற்றி சொல்ல தேவையில்லை. குறிப்பாக வில்லியாக வரும் வெண்பா குறித்து விவரிக்க வேண்டியதில்லை. அந்த அளவிற்கு வில்லத்தனமான கதாபாத்திரங்களில் ஒன்றாக இது உள்ளது.
Advertisment
Advertisements
ரசிகர்களின் குமுறலையும், திட்டையும் வாங்கும் இந்த வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை ஃபரீனா ஆசாத் நடிக்கிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தான் கர்ப்பமாக இருப்பதை கடந்த வருடத்தில் அவர் தெரிவித்து இருந்த நிலையில், தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். ஆனால், அவரால் பிரசவ கால இறுதி நாட்களில் நடிக்க முடியாது என்பதால் அவருக்கான காட்சிகள் குறைக்கப்பட்டன. எனவே, சீரியலில் அவர் கடைசியாக சிறையில் அடைக்கப்படுவது போல் காட்டப்பட்டது.
இந்நிலையில், ஃபரினா ஆசாத்துக்கு கடந்த நவம்பர் மாதம் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து சில தினங்களில், அவரது குழந்தையின் பெயர் சூட்டு விழா பிரபல தனியார் ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பங்கேற்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகின.
இதற்கிடையில், குழந்தை பிறந்து ஒரு மாதங்கள் கூட ஆகாத ஃபரினா, பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பாகத்தில் பகிர்ந்திருந்தார். அவையும் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.
ஃபரினா, தனது மகனுக்கு ஜெய்ன் லாரா ரஹ்மான் (Zayn Lara Rahman) என்று பெயர் வைத்துள்ள நிலையில், அவருக்கு கடந்த வாரத்தில் போட்டோ ஷூட் நடத்தினார். அந்தப் புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவை அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகின.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஃபரினா, சமந்தா நடனமாடிய 'ஓ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு செம ஆட்டம் போட்டு இருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள நிலையில், தற்போது அது இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் தீயாக பரவி வருகிறது.