scorecardresearch

மகனையும் வைரலாக்கும் வெண்பா… வெளியான புதிய போட்டோஷூட்

Serial Actress Farina Azad son’s latest photos goes viral Tamil News: நடிகை ஃபரினா, தனது மகனுக்கு ஜெய்ன் லாரா ரஹ்மான் என்று பெயர் வைத்துள்ள நிலையில், தற்போது போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Farina Azad Tamil News: bharathi Kannama farina son latest photoshoot

Farina  Azad Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக ‘பாரதி கண்ணம்மா’ வலம் வருகிறது. ப்ரைம்டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ஒளிபரப்பாகி வரும் எபிசோடுகள் அனைத்தும் பரபரப்போடு உள்ளதால் டிஆர்பியில் முதல் இடத்திலும் உள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இதில் தோன்றும் காதாபாத்திரங்கள் பற்றி சொல்ல தேவையில்லை. குறிப்பாக வில்லியாக வரும் வெண்பா குறித்து விவரிக்க வேண்டியதில்லை. அந்த அளவிற்கு வில்லத்தனமான கதாபாத்திரங்களில் ஒன்றாக இது உள்ளது.

ரசிகர்களின் குமுறலையும், திட்டையும் வாங்கும் இந்த வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை ஃபரீனா ஆசாத் நடிக்கிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், ஃபரீனா அவர் கர்ப்பமாக இருப்பதை கடந்த வருடத்தில் தெரிவித்து இருந்தார். தான் கர்ப்பமாக இருந்த நிலையிலும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். பிரசவ கால இறுதி அவரால் நடிக்க முடியாது என்பதால் அவருக்கான காட்சிகள் குறைக்கப்பட்டன. கடைசியாக அவர் சிறையில் அடைக்கப்படுவது போல் காட்டப்பட்டது.

இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் ஃபரினா ஆசாத்துக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அவரது குழந்தையின் பெயர் சூட்டு விழா பிரபல தனியார் ஹோட்டலில் கோலாகளமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பங்கேற்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகின.

இதற்கிடையில், குழந்தை பிறந்து ஒரு மாதங்கள் கூட ஆகாத ஃபரினா, பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். அந்த புகைப்படங்களை சமீபத்தில் தனது இன்ஸ்டா பாகத்தில் பகிர்ந்திருந்தார். அவையும் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. ஆனால், அவர் நடித்த காட்சிகள் இன்னும் ஒளிபரப்பாகவில்லை.

இந்நிலையில், தனது மகனுக்கு ஜெய்ன் லாரா ரஹ்மான் (Zayn Lara Rahman) என்று பெயர் வைத்துள்ள நடிகை ஃபரினா, தற்போதுபோட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Farina azad tamil news bharathi kannama farina son latest photoshoot