மகனுக்காக பிரம்மாண்ட விழா எடுத்த ஃபரீனா… என்ட்ரி கொடுத்த திரை பிரபலங்கள்

Bharathi Kannama serial actress Farina Azad baby boy naming function Tamil News: நடிகை ஃபரினா மகனின் பெயர் சூட்டு விழா பிரபல தனியார் ஹோட்டலில் கோலாகளமாக நடைபெற்ற நிலையில், இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையைச் சேர்ந்த பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

Farina Azad Tamil News: Bharathi Kannama serial venba farina baby boy naming function

Serial Actress Farina Azad Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முன்னணி சீரியலாக ‘பாரதி கண்ணம்மா’ வலம் வருகிறது. தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு கதை சூடுபிடித்துள்ளது. மேலும், புதிய கண்ணம்மாவின் வருகை அதிக பார்வையளர்களை ஈர்த்துள்ளது. கூடவே அறந்தாங்கி நிஷா காமெடியில் ஸ்கோர் செய்து வருகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்துக்கு பிறகு அதிகம் பிரபலமான கதாபாத்திரமாக “வெண்பா” கதாபாத்திரம் உள்ளது. இந்த வெண்பா கதாபாத்திரத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளினி ஃபரீனா ஆசாத் நடிக்கிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், ஃபரீனா அவர் கர்ப்பமாக இருப்பதை கடந்த வருடத்தில் தெரிவித்து இருந்தார். தான் கர்ப்பமாக இருந்த நிலையிலும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். பிரசவ கால இறுதி அவரால் நடிக்க முடியாது என்பதால் அவருக்கான காட்சிகள் குறைக்கப்பட்டன. கடைசியாக அவர் சிறையில் அடைக்கப்படுவது போல் காட்டப்பட்டது.

இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் ஃபரினா ஆசாத்துக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

ஃபரினா தனக்கு குழந்தை பிறந்து ஒரு மாதங்கள் கூட ஆகாத நிலையில் பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். அந்த புகைப்படங்களை சமீபத்தில் தனது இன்ஸ்டா பாகத்தில் பகிர்ந்திருந்தார். அவை சமூக வலைதளஙக்ளில் வைரலாகின.

இந்த நிலையில் நடிகை ஃபரினா மகனின் பெயர் சூட்டு விழா பிரபல தனியார் ஹோட்டலில் கோலாகளமாக நடைபெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பங்கேற்று இருக்கின்றனர். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Farina azad tamil news bharathi kannama serial venba farina baby boy naming function

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express