Advertisment
Presenting Partner
Desktop GIF

வேற லெவல் வெண்பா… குழந்தைக்கு பாலூட்டியபடி ஷூட்டிங் மேக்கப்!

Bharathi Kannama serial venba Farina Azad at shooting with her baby boy Tamil News: கடந்த நவம்பர் மாதம் தான் ஃபரினா ஆசாத்துக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது தனது கைக்குழந்தையுடன் "பாரதி கண்ணம்மா" ஷூட்டிங்கில் கலந்துகொண்டு இருக்கிறார் ஃபரினா.

author-image
WebDesk
New Update
Farina Azad Tamil News: farina with her baby boy in Bharathi Kannama serial shooting

Farina  Azad Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஃபரினா ஆசாத். நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமான இவர் தற்போது மிரட்டும் வில்லியாக வளர்ச்சி பெற்றுள்ளார். இந்த அளவிற்கு அவர் உயர அவரின் தொடர்ச்சியான உழைப்பு முக்கிய காரணமாகும்.

Advertisment

முன்னதாக நிறைய டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ஃபரினா, ஜீ தமிழின் "அஞ்சறைப்பெட்டி" நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்கேற்றார். தொடர்ந்து கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பான ‘தறி’ சீரியலில் நடித்தார். தற்போது விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் ஒன்றாக வெண்பாவாக நடிக்கிறார்.

publive-image
ஃபரினா ஆசாத்

இந்த சீரியலில் மருத்துவர் வெண்பாவாக நடிக்கும் ஃபரினா, ஏற்கனவே திருமணமான மருத்துவர் பாரதியை ஒரு தலையாக காதலிப்பவராக நடிக்கிறார். தன் காதலை அடைவதற்காக வெண்பா எடுக்கும் வில்லத்தனமான முயற்சிகள் சீரியலை சுவாரஸ்யாக கொண்டு செல்கிறது.

publive-image
ஃபரினா ஆசாத்

ரஹ்மான் உபாயத் என்பரை கடந்த 2017 ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட ஃபரினா, அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த ஆண்டில் தனது இன்ஸ்டா பதிவின் மூலம் தெரிவித்து இருந்தார்.

அவர் கர்ப்பமாக இருந்த நிலையிலும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். பிரசவ காலத்தின் இறுதி நாட்களில் அவரால் நடிக்க முடியாது என்பதால் அவருக்கான காட்சிகள் குறைக்கப்பட்டன. கடைசியாக அவர் சிறையில் அடைக்கப்படுவது போல் காட்டப்பட்டது.

publive-image

இதற்கிடையில், கர்ப கால போட்டோ ஷூட்களையும் நடத்தி வந்தார் ஃபரினா. இதற்கு சமூக வலைதளத்தில் பல விதமான நெகட்டிவ் கமெண்டுகள் வந்தாலும், அதை பற்றியெல்லாம் கவலைப்படாத அவர் தொடர்ந்து விதவிதமான கர்ப கால போட்டோ ஷூட்களை நடத்தினார். இதில் அவர் நீருக்கு அடியில் நடத்திய போட்டோ ஷூட் அதிகம் பகிரப்பட்டு வைரலாகியது.

publive-image

இந்த நிலையில், கடந்த நவம்பர் 19ம் தேதி ஃபரினா ஆசாத்துக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மருத்துவமனையில் பெட்டில் இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார் ஃபரினா. அதில் தானும் மகனும் நலமாக இருப்பதாகவும், தனக்கு சுகப்பிரசவம் தான் என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும், தான் விரைவில் திரும்பி வருவேன் என்றும் அந்த புகைப்படத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், குழந்தை பிறந்து சில மாதங்களே ஆனா பரீனா தற்போது பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்துகொண்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களையும், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ஃபரினா.

publive-image

அந்த புகைப்படத்தில் தன் பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டியபடியே மேக்கப் போட்டு கொண்டு இருக்கிறார். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் அவரின் கடின உழைப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

publive-image

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது புதிய கண்ணம்மா மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோரின் வரவால் சீரியல் சூடுபிடித்துள்ள நிலையில், ஃபரினா வரவு இன்னும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Entertainment News Tamil Tamil Serial News Bharathi Kannamma Serial Tamil Serial Update Vijaytv Serial Farina Azad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment