/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-18T100205.028.jpg)
Serial Actress Farina Azad Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முன்னணி சீரியலாக ‘பாரதி கண்ணம்மா’ வலம் வருகிறது. அதிலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் எபிசோடுகள் அனைத்தும் பரபரப்போடு உள்ளதால் டிஆர்பியில் டாப் 3 இடங்களை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு வெண்பா குறித்து சொல்லவே தேவையில்லை. ஏனென்றால், இந்த சீரியலில் வரும் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/Screenshot-2021-07-23-at-10.21.57-AM.png)
இந்த வெண்பா கதாபாத்திரத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளினி ஃபரீனா ஆசாத் நடிக்கிறார். அவர் கர்ப்பமாக இருந்த நிலையிலும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். பிரசவ காலத்தில் அவரால் நடிக்க முடியாது என்பதால் அவருக்கான காட்சிகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளன. கடைசியாக அவர் சிறையில் அடைக்கப்படுவது போல் காட்டப்பட்டு இருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/Screenshot-2021-07-23-at-10.22.23-AM.png)
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஃபரினா ஆசாத்துக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தற்போது மருத்துவமனையில் பெட்டில் இருக்கும் ஃபரினா ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், தானும் மகனும் நலமாக இருப்பதாகவும், தனக்கு சுகப்பிரசவம் தான் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், தான் விரைவில் திரும்பி வருவேன் என்றும் அந்த புகைப்படத்தில் கூறியிருக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-18T094425.673.jpg)
ஃபரினா ஆசாத் இப்படி கூறியிருப்பதை பார்க்கையில் அவர் விரைவிலே பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சீரியல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/Screenshot-2021-11-18-at-10.10.26-AM.png)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us