ரஜினியின் செல்லமகள் சவுந்தர்யா தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அப்பாக்கள் மீது பெண் பிள்ளைகளுக்கு எப்போதுமே பிரியம் அதிகம். ஆண் பிள்ளைகளுக்கு அம்மாவை பிடிக்கும். அப்பாக்கள் மீது மரியாதை இருக்கும். பெண் பிள்ளைகளுக்கு அப்பா என்றால் உயிர். அம்மா என்றால் பயம். இது காலம் காலமாக நம் குடும்பங்களில் இருந்து வரும் ஒரு பேச்சு தான். சினிமா துறையை பொருத்தவரையில் தங்களின் அப்பாக்களோ அல்லது அம்மாக்களோ சினிமா பிரபலமாக இருந்தால் அவர்களுடன் அதிகம் நேரம் செலவழிக்க வாய்ப்பு இல்லாமல் போவதுண்டு.
அதற்கு அவர்கள் பிரபலமாக இருப்பது கூட ஒருவகை காரணமாக இருக்கலாம். ஷூட்டிங் பிஸி, பொது நிகழ்ச்சிகள், பேட்டிகள், நேரமின்மை என பல காரணங்கள் உள்ளன. சிறு பிள்ளையாக இருக்கும் போது அதை புரிந்துக் கொள்ள முடியாதவர்கள் வளர்ந்து, அதே சினிமா துறையில் அவர்களும் நுழைந்த பின்பு தனது தாய், தந்தையின் நிலமையை எளிதாக புரிந்துக் கொள்வார்கள். இந்த லிஸ்டில் சூப்பர் ஸ்டார் மகள்கள் தொடங்கி சீரியல் நடிகர்களின் மகள்கள் வரை எல்லோருமே வருவார்கள்.
இப்படி, இருக்க இன்றைய தந்தையர் தின ஸ்பெஷலில் பிரபலங்களின் பிள்ளைகள் பலரும் தங்களின் தந்தைக்கு வித்யாசமான முறையில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமூகவலைத்தளத்தை கலக்கிய பிரபலங்கள், பிரபலங்களின் பிள்ளைகளின் தந்தையர் தின போஸ்ட்டுகள் உங்கள் பார்வைக்கு..
சூப்பர் ஸ்டாரின் 2 ஆவது மகளும், இயக்குனருமான சவுந்தர்யா ரஜினிகாந்தின் பழைய பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தை பகிர்ந்து அதில் மிகவும் உருக்கமான தந்தையர் தின வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். ”எனக்கு தெரிந்த நேர்மையான மனிதர். நேர்மை, கடின உழைப்புக்கு சொந்தக்காரர்.உங்களுக்கு மகளாய் பிறந்ததை நினைத்து ஒவ்வொரு நாளும் பெருமை அடைகிறேன். என் அப்பாவிற்கு நான் என்றுமே இளவரசி தான்” என்று பதிவிட்டுள்ளார்.
கங்கை அமரனின் மகனும், இயக்குனருமான வெங்கட் பிரபு தனது தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
நடிகை காஜல் அகர்வாலின் தந்தையர் தின வாழ்த்து
விஜய் டிவி புகழ் ரம்யா தனது தந்தையுடன்...
பாடகர் க்ரிஷ் தனது செல்ல மகளுடன்..