பிக்பாஸ் பிரபலம் வீட்டில் நுழைந்த பாம்பு : முதியவர்கள் அலறியடித்து ஓட்டம்

Snake Found in Retirement Home Run by Tamil Actress and bigg boss fame Fathima Babu Tamil News: பிக்பாஸ் பிரபலம் நடிகை பாத்திமா நடத்தி வரும் முதியோர் இல்லத்தில் பாம்பு புகுந்ததால், அங்கிருந்த முதியவர்கள் அலறியடித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Fathima Babu Tamil News: Snake Found in Retirement Home Run by bigg boss fame Fathima

Fathima Babu Tamil News: சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பாப்புலர் ஆனவர்தான் நடிகை பாத்திமா பாபு. நமது அண்டை மாநிலமான கேரளாவில் பிறந்த இவர், தூதர்ஷன் தொலைக்காட்சியில் தான் முதன்முதலாக தனது செய்தி வாசிப்பு பயணத்தை தொடங்கினார். பின்னர், சன் டிவி மற்றும் ஜெயா டிவியில் பணியாற்றினார்.

நடிகை பாத்திமா, 1996ம் ஆண்டு இயக்குநர் இமயம் கேபாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘கல்கி’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் மலையாளம், தெலுங்கு மொழித்திரைப்படங்ளில் நடித்தார். மேலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார்.

நடிகை பாத்திமாவுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறையவே அவர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். இதற்கிடையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் விஜய் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பலருக்கும் அட்வைஸ் கொடுக்கும் அம்மாவாக வலம் வந்த இவர் ஒரு சில வாரங்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு நடத்தப்படும் பிபி ஜோடிகள் நிகழ்சியிலும் இவர் கலந்துகொண்டு தனது நடன திறமை வெளிப்படுத்தி இருந்தார்.

தற்போது சென்னை ஐயப்பன் தாங்கலில் வசித்து வரும் நடிகை பாத்திமா, அங்கு 20க்கும் மேற்பட்ட முதியவர்களை தங்க வைத்து முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அந்த முதியோர் இல்லத்தில் பாம்பு புகுந்ததால் முதியோர்கள் அனைவரும் பயந்து அலறியடித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், பாம்பு பிடிக்கப்பட்டு கிண்டியில் உள்ள பூங்கா ஒன்றில் விடப்பட்டு இருக்கிறது. அது ஆறு அடி நீளமுல்லா சாரை பாம்பு என அந்த பகுதியைச் சேர்ந்த மாக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Fathima babu tamil news snake found in retirement home run by bigg boss fame fathima

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express