Advertisment

2023-ல் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் யார்?.. ரஜினி, அஜித்தை முந்திய விஜய்!

தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் யார் என்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், ரஜினிகாந்த், அஜித்தை முந்தி அதிக ரசிகர்களைக் கவர்ந்த நம்பர் ஒன் நடிகராக விஜய் இடம்பிடித்துள்ளார். 

author-image
WebDesk
New Update
Vijay Rajini Ajith

விஜய், ரஜினிகாந்த், அஜித்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவுக்கு கடந்த 2023-ம் ஆண்டு ஒரு பிரமாதமான ஆண்டாக அமைந்தது. சினிமா பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் வசூலில் சாதனை படைத்த படங்கள் பலவும் கடந்த ஆண்டுதான் வெளியானது. விஜய்யின் வாரிசு, அஜித் துணிவு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. இதைத் தொடர்ந்து வெளியான, ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம், உலக அளவில் 800 வசூலித்து புதிய சாதனை படைத்தது. அதே நேரத்தில், ஷாருக்கான் நடித்த பதான், ஜவான் படங்கள் இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. 

Advertisment

இந்நிலையில், தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் யார் என்று ஒன் இந்தியா மற்றும் ஃபிலிமிபீட் நடத்திய கருத்துக் கணிப்பில், ரஜினிகாந்த், அஜித்தை முந்தி அதிக ரசிகர்களைக் கவர்ந்த நம்பர் ஒன் நடிகராக விஜய் இடம்பிடித்துள்ளார். 

பிலிமிபீட் நடத்திய கருத்துக் கணிப்பில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் வாக்களித்துள்ளனர். அதன்படி, விஜய் முதலிடத்தையும் ரஜினிகாந்த் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். அஜித் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். 

இந்த கருத்துக் கணிப்பில் விஜய், ரஜினிகாந்த், அஜித் இடையே எத்தனை சதவீதம் வாக்கு வித்தியாசம் என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம்.

#1 விஜய்

ஒன் இந்தியா தமிழ் மற்றும் ஃபிலிமிபீட் நடத்திய 2023-ல் உங்களை மிகவும் கவர்ந்த நடிகர் யார்? என்கிற கருத்துக் கணிப்பில் அதிகப்படியான ரசிகர்கள் பங்கேற்று வாக்குகளை செலுத்தினர். அதில், 26.4 சதவீத ஓட்டுக்களுடன் நடிகர் விஜய் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில்,  ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார்.

#2 ரஜினிகாந்த்

இந்த கருத்துக் கணிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ரஜினிகாந்த்-க்கும் நடிகர் விஜய்க்கும் சிறிய அளவிலான வாக்கு வித்தியாசம் மட்டுமே உள்ளது. தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிசில் ஜெயிலர் படம் 800 கோடி வசூல் செய்து 72 வயதிலும் மாஸ் காட்டியுள்ளார். இந்த கருத்துக் கணிப்பில் ரஜினிகாந்த் 24.13 சதவீத வாக்குகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார். 

#3 அஜித் 

இந்த கருத்துக் கணிப்பில், அஜித் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு விஜய்யின் வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவு படம் வெளியானது. அஜித்தின் துணிவு படம் 200 கோடி வரை வசூல் செய்தது. கருத்துக் கணிப்பில் 21.12 சதவீதம் பேர் அஜித்துக்கு வாக்களித்துள்ளனர்.

actors 

#4 கவின்

அதே நேரத்தில், முன்னணி நடிகர்களான விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரை பின்னுக்குத் தள்ளி விட்டு கடந்த ஆண்டு ரசிகர்களைக் கவர்ந்த நடிகராக அதிக வாக்குகளைப் பெற்று நடிகர் கவின் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த கருத்துக் கணிப்பில் நடிகர் கவின் 12.9 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். 

#5 விக்ரம்

நடிகர் சீயான் விக்ரம் இந்த கருத்துக் கணிப்பில் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். விக்ரம் 4.37 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். இந்த ஆண்டு இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

#6 சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் இந்த கருத்துக் கணிப்பில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். 4.9 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மாவீரன் படம் பெரும் வெற்றி பெற்றது. இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

#7 தனுஷ்

நடிகர் தனுஷ் இந்த கருத்துக் கணிப்பில், 3.37 சதவீத வாக்குகளுடன் 7-வது இடத்தைப் பிடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

#8 சிம்பு 

நடிகர் சிம்பு இந்த கருத்துக் கணிப்பில் 3.32 சதவீத வாக்குகளுடன் 8-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

இந்த ஆண்டு ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ஆகிய முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment