'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்துக்கு டஃப் கொடுக்கும்... டாப் ஃபீல் குட் படங்கள் இவைதான்!

2025ஆம் ஆண்டின் சிறந்த ஃபீல் குட் படமாக 'டூரிஸ்ட் ஃபேமிலி' விமர்சன, வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அந்த வகையில், இந்த வாரம் ஓடிடியில் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்களை இப்போன்று பார்ப்போம்.

2025ஆம் ஆண்டின் சிறந்த ஃபீல் குட் படமாக 'டூரிஸ்ட் ஃபேமிலி' விமர்சன, வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அந்த வகையில், இந்த வாரம் ஓடிடியில் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்களை இப்போன்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-08-22 144444

2025ஆம் ஆண்டின் சிறந்த ஃபீல் குட் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் 'டூரிஸ்ட் ஃபேமிலி', தன் குறைந்த பட்ஜெட்டை விட 200 மடங்கு அதிகமாக வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது.

Advertisment

விமர்சன ரீதியாகவும் இது மெகா ஹிட் ஆகும் நிலையில், இதுபோன்ற திரைப்படங்கள் ஏற்கனவே எதற்காக குறைவாக உருவாகின்றன என்பதைப் பற்றி சினிமா ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இன்றைய வேகமான வாழ்க்கை சூழலில், சண்டை சலசலப்பில்லாமல் மனதிற்கு நிம்மதி தரும் டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களுக்கே அதிகப்படியான விருப்பம் உள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்த வாரம் ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங் ஆகும் ஃபீல் குட் திரைப்படங்களை இப்பதிவில் காணலாம்.

எ டூரிஸ்ட் கைடு டு லவ் - (நெட்பிளிக்ஸ்)

2023 ஆம் ஆண்டில் வெளியான 'எ டூரிஸ்ட் கைடு டு லவ்' என்பது ஒரு ரொமான்டிக், அட்வென்ச்சர் மற்றும் காமெடி கலந்த திரைப்படம். காதலில் தோல்வி அடைந்த ஒரு இளம் பெண், மன அழுத்தத்தால் வியட்நாம் நாட்டில் பயணம் செய்கிறார்.

Advertisment
Advertisements

அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்களும், காட்சிகளும் அவருடைய வாழ்க்கையில் புதிய மாற்றங்களை உருவாக்குகின்றன. இந்த மனதை மகிழ்ச்சியாக்கும் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.

பாஸ்போர்ட் டு பாரிஸ் - (அமேசான் பிரைம்)

1999-ஆம் ஆண்டில் வெளியாகிய பாஸ்போர்ட் டு பாரிஸ் என்பது ஒரு வெற்றிகரமான ஃபீல் குட் திரைப்படமாகும். பன்னிரண்டு வயது இரட்டையர்கள் மெலனி மற்றும் அலிசன், தாத்தாவுடன் சேர்ந்து பெர்சில் விடுமுறையை அனுபவிக்கிறார்கள்.

பாரிஸ் நகரில் நிகழும் அவர்களது சுவாரஸ்யமான சாகசங்களே இந்த படத்தின் முக்கியமான கதையாக அமைந்துள்ளன. இந்த படம் பார்வையாளர்களுக்கு பெரிஸ்செல்வதற்கான ஆர்வத்தை அதிகரிக்க வைக்கிறது. இதனை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.

எ பேமிலி டூர் - 9அமேசான் பிரைம்)

2018-ல் வெளியாகிய 'எ பேமிலி டூர்' என்பது ஒரு ஃபீல் குட் திரைப்படம். இயக்குநர் ஒருவர், தனது படம் சீனாவில் தடைபட்டதால், ஹாங்காங் நகரில் நடைபெறும் திரைப்பட விழாவில் அதை திரையிட தனது குடும்பத்துடன் பயணிக்கிறார்.

இந்த பயணத்தில் நிகழும் சம்பவங்களும், அனுபவங்களும் இப்படத்தின் முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான கதையாக அமைந்துள்ளன. இதனை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.

பேமிலி கேம்ப் - (நெட்பிளிக்ஸ், ஜீ5 மற்றும் அமேசான் பிரைம்)

2022 ஆம் ஆண்டில் வெளியாகிய 'பேமிலி கேம்ப்' என்பது காமெடியும் குடும்ப நாடகமும் கலந்த திரைப்படமாகும். எப்போதும் சிக்கலான உறவுகள் கொண்ட இரண்டு குடும்பங்கள், ஒரு கேம்பில் எதிர்க் கொண்டு சந்திக்கும் போது உருவாகும் கலாட்டல்களையே இப்படம் பேசுகிறது. இதனை நெட்பிளிக்ஸ், ஜீ5 மற்றும் அமேசான் பிரைம் ஓடிடிகளில் பார்க்க முடியும்.

தி பக்கெட் லிஸ்ட் - (அமேசான் பிரைம்)

2007ம் ஆண்டு வெளிவந்த அட்வென்ச்சர் ஃபீல் குட் திரைப்படம் 'தி பக்கெட் லிஸ்ட்'. புற்றுநோய் பாதிக்கப்பட்ட இரண்டு ஆண்கள் மருத்துவமனையில் இருந்து தப்பித்து தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு ட்ரிப் செல்கின்றனர். சூப்பரான இந்த ஃபீல் குட் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.

இந்த படங்களை உங்கள் குடும்பத்தினருடன் பார்த்து மகிழுங்கள். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: