Advertisment

அப்பா- அம்மா முன்னால இப்படி அந்தரங்கம் பேசலாமா? சம்யுக்தா மீது சன் டி.வி சீரியல் நடிகை காட்டம்

பெற்ற தாய்-தந்தை முன்னிலையில் அந்தரங்கம் பேசலாமா என சக்யுக்தாவிடம் பிரபல சீரியல் நடிகை காட்டமாக கேள்வியெழுப்பி உள்ளார்.

author-image
WebDesk
New Update
Fellow actress question to actress Samyukta

சம்யுக்தா விஷ்ணுகாந்த்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆனந்தராகம் என்ற சீரியலில் நடித்துவருபவர் ரீஹானா. இவர் விஷ்ணுகாந்த்-சம்யுக்தா பிரிவு தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்தை ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

அந்தக் கருத்து பெரும் சர்ச்சையானது. ரீஹானாவை பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் ரீஹானா, “விஷ்ணு காந்த்தும், சம்யுக்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். எனக்கு விஷ்ணுகாந்த் பற்றி முழுமையாக தெரியாது.

Advertisment

ஆனாலும் ஓரளவு தெரியும். இருவரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசி பிரச்னைனையை பெரிதாக்குகின்றனர். சம்யுக்தா தன் மீது தப்பு இல்லை என்பதை காட்ட இவ்வாறு பேசி வருகிறார்.

அப்பா-அம்மா முன்னாடி தனது அந்தரங்க விஷயங்களை பேசுகிறார்.

விஷ்ணுகாந்த்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் பாலியல் தொல்லை அளிக்கிறார்” என்கிறார்.

இவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். தங்கள் பிரச்னையை இவர்களே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார். சின்னத் திரை நடிகை சம்யுக்தாவும்-விஷ்ணுகாந்த்தும் திருமணம் ஆன சில நாள்களிலே பிரிந்துவிட்டனர்.

தொடர்ந்து இருவரும் தங்கள் குடும்ப பிரச்னையை சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்களிடம் வைக்கின்றனர். அப்போது இது சர்ச்சையாகிறது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment