சந்திரமுகி 2ம் பாகத்தில் நடித்துள்ள ராகவா லாரன்ஸ் 2002ஆம் ஆண்டு அற்புதம் என்ற படத்தில் அறிமுகமானார். சூப்பர் குட் பிலீம்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தை இயக்குனர் அற்புதன் டைரக்ட் செய்திருந்தார்.
இந்தப் படத்தில் வையாபுரி, தாமு, அனு பிரபாகர், குணால் என பலர் நடித்திருந்தனர். டைரக்டர் அற்புதன், ஷாம் நடிப்பில் மனதோடு மழைக்காலம் மற்றும் தெலுங்கில் லவ் டுடே உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.
52 வயதான அற்புதன் சமீபத்தில் விபத்தில் சிக்கினார். இவருக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. டைரக்டர் அற்புதனின் மரணம் தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு திரைக் கலைஞர்கள் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“