பரியேறும் பெருமாள், 96 படங்கள் பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளளன. 96 படத்திற்கு 96 விருதுகளை வழங்கினாலும் தகும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..
தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் படங்களை ஊக்குவிக்கும் வண்ணம் நடத்தப்படும் 66வது யமஹா பேஸினோ பிலிம்பேர் சவுத் விருதுகள் வழங்கும் விழா, சென்னையில், 21ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
திரையுலகம் வாரியாக விருது பெற்ற படங்கள், கலைஞர்கள்
தமிழ்
சிறந்த படம் - பரியேறும் பெருமாள்
சிறந்த இயக்குனர் - ராம் குமார் ( படம் : ராட்சசன்)
சிறந்த நடிகர் - தனுஷ் (வடசென்னை), விஜய் சேதுபதி (96)
விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகர் - அரவிந்த் சாமி ( செக்கச்சிவந்த வானம்)
சிறந்த நடிகை - த்ரிஷா கிருஷ்ணன் (96)
விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகை - ஐஸ்வர்யா ராஜேஷ் (கனா)
சிறந்த துணை நடிகர் - சத்யராஜ் ( கனா)
சிறந்த துணை நடிகை - சரண்யா பொன்வண்ணன் (கோலமாவு கோகிலா)
சிறந்த இசையமைப்பாளர் - கோவிந்த் வசந்தா (96)
சிறந்த பாடல் - காதலே காதலே (96)
சிறந்த பின்னணி பாடகர் - சித் ஸ்ரீராம் ( ஹேய் பெண்ணே - பியார் பிரேமா காதல்)
சிறந்த பின்னணி பாடகி - சின்மயி ( காதலே காதலே - 96)
சிறந்த அறிமுக நடிகை - ரைசா வில்சன் (பியார் பிரேமா காதல்)
தொழில்நுட்ப விருதுகள்
சிறந்த நடனம் - பிரபுதேவா, ஜானி ( ரவுடி பேபி)
சிறந்த ஒளிப்பதிவு - ரத்னவேலு (ரங்கஸ்தலம்)
தெலுங்கு
சிறந்த படம் - மகாநடி
சிறந்த இயக்குனர் - நாக் அஸ்வின் ( மகாநடி)
சிறந்த நடிகர் - ராம் சரண் (ரங்கஸ்தலம்)
விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகர் : துல்கர் சல்மான் ( மகாநடி)
விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகை : ராஷ்மிகா மந்தானா ( கீதம் கோவிந்தம்)
சிறந்த துணை நடிகர் - ஜகபதி பாபு (அரவிந்த சமேத வீர ராகவா)
சிறந்த துணை நடிகை ( அனுசுயா பரத்வாஜ்)
சிறந்த இசை ஆல்பம் - தேவி ஸ்ரீபிரசாத் (ரங்கஸ்தலம்)
மலையாளம்
சிறந்த படம் - Sudani From Nigeria
சிறந்த இயக்குனர் - லிஜோ ஜோஸ் பெலிச்சேரி
கன்னடம்
சிறந்த படம் - கேஜிஎப்
சிறந்த இயக்குனர் - மன்சூர் ( நதிசரமி)
வாழ்நாள் சாதனயாளர் விருது - ஹரிஹரன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.