Advertisment

கலையுலகத்துக்கு தன்னை அர்ப்பணித்த இயக்குநர் அருண்மொழி மறைவு

இந்த ஆவணப்படம் தான் பண்ணையார்களைப் பற்றி தமிழில் வெளிவந்த முதல் ஆவணப்படம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Filmmaker Arunmozhi

Filmmaker Arunmozhi

Director Arunmozhi Passes Away:  தமிழ் குறும்பட இயக்குநர்களில் முக்கியமானவராக திகழ்ந்தவர் அருண்மொழி. நடிகர், இயக்குநர், நாடக இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடிப்பு கற்றுத் தரும் ஆசிரியர் என பன்முகத் திறமைக் கொண்டவர். புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்கம் படித்தவர். இயக்குநர் ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான் என்ற படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்தவர், நாசரை ஹீரோவாக வைத்து ‘ஏர்முனை’ என்ற படத்தை இயக்கினார்.

1985-இல் நிலமோசடி என்ற ஆவணப்படத்தை இயக்கினார். இந்த ஆவணப்படம் தான் பண்ணையார்களைப் பற்றி தமிழில் வெளிவந்த முதல் ஆவணப்படம். வடபாதி மங்கலம் தியாகராச முதலியார், சௌகத் அலி, வலிவலம் தேசிகர், ஜி.கே.மூப்பனார் உள்ளிட்ட பண்ணையார்களின் பல வழக்குகளை பற்றிய ஆவணப்படம் இது. இளையராஜாவைப் பற்றிய ஆவணப்படத்தை 1992-ல் எடுத்தார். 80 நிமிடம் கொண்ட இப்படத்தில் ஜேசுதாஸ், செம்மஞ்குடி சீனிவாச ஐயர், கமல், சிவாஜி, மம்முட்டி எனப் பலரது நேர்காணல்கள் இடம்பெற்றன.

இவர் கடந்த சனிக்கிழமை இரவு காலமானார். சென்னையில் நடக்கும் ஜப்பானிய திரைப்பட விழாவில் பார்வையாளராகச் சென்று படம் பார்த்துக் கொண்டிருந்திருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். தமிழ் குறும்பட வரலாற்றில் தனித்துவம் மிக்க படைப்பாளியான அருண்மொழி கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஆவணப்படங்கள் பலவற்றை இயக்கியுள்ளார். இவரது ‘காணி நிலம்’ திரைப்படம் லண்டன், ஜெர்மனி உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment