குடும்பத்தை நேசித்து வாழுங்கள்; மகாலட்சுமி கணவர் ரவீந்திரன் உருக்கமான பதிவு

அன்பு என்பது கவனிப்பை பற்றியது. ஒவ்வொரு விருப்பத்தில் இருந்தும் உண்மையான அன்பு மற்றும் கவனிப்பை நான் கண்டேன். குடும்பத்திற்காக நேசித்து வாழுங்கள்” என ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ravindran

மகாலட்சுமி- ரவீந்திரன் ஜோடி

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்திரன் ஜோடி திரையுலகில் பரபரப்பான ஜோடியாக வலம்வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ரவீந்திரன் மோசடி வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றார்.
அப்போது இருவரும் பிரிந்துவிட்டதாக வதந்திகள் உலாவின. இதனை முதிர்ச்சியாக கையாண்ட மகாலட்சுமி, “என்னில் புன்னகையை வரவழைக்க நீ தவறுவதில்லை.. எவர் மீதும் அன்பு கொள்வதற்கு காரணம் நம்பிக்கை; ஆனால், இங்கே என்னை விட நம்பிக்கை உன்னை நேசிக்கிறது!! அதே அன்பைப் பொழிந்து, முன்பு போல என்னைக் காத்து.. லவ் யூ லோட்ஸ்ஸ்ஸ்ஸ் அம்மு ” என்று பதிவிட்டு இருந்தார்.

Advertisment

Ravinder said that Mahalakshmi likes food

இந்த நிலையில் தற்போது ரவீந்திரன் இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “அன்பு என்பது கவனிப்பை பற்றியது. ஒவ்வொரு விருப்பத்தில் இருந்தும் உண்மையான அன்பு மற்றும் கவனிப்பை நான் கண்டேன். குடும்பத்திற்காக நேசித்து வாழுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்த  பாலாஜி கபா என்பவர் சென்னை காவல் ஆணையாளரிடம் கொடுத்த  புகாரின் அடிப்படையில் ரவீந்திரன் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Advertisment
Advertisements

 

Cinema Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: