/indian-express-tamil/media/media_files/2025/09/11/download-1-2025-09-11-17-22-48.jpg)
ஓடிடி தளங்களின் முக்கிய நன்மை என்னவெனில், நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் உங்கள் விருப்பமான உள்ளடக்கங்களை பார்க்க முடியும். இது நேரத்திற்கும் இடத்திற்குமான கட்டுப்பாட்டை தாண்டிய ஒரு வசதியாக இருக்கிறது. மேலும் பல்வேறு மொழிகளில் உள்ள தரமான திரைப்படங்கள் மற்றும் தொடர்களை வழங்குவதோடு, பயனர்களின் பார்வை பழக்கத்தைக் கணித்தும் புதிய பரிந்துரைகள் வழங்குகிறது. இன்று சில திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகின்றன, எனவே திரையரங்கிற்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் வீட்டிலிருந்தே புதிய படங்களை அனுபவிக்கலாம். சிறந்த தரமான உள்ளடக்கங்களை வழங்கும் இந்த தளங்கள், நவீன வாழ்க்கை முறையில் முக்கியமான பொழுதுபோக்கு வழியாக மாறிவிட்டன.
உலகம் முழுவதும் உள்ள பிரபலமான சர்வதேச திரைப்படங்களுடன், தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உருவாக்கப்பட்ட உள்ளூர் படைப்புகளும் இடம் பெற்றுள்ளன. அதற்கான ரிலீஸ் தேதி, கதை வகை, நடிகர்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த வார ரிலீசுகளுக்கான விரிவான தகவல்களை இப்பதிவில் நாம் பார்க்கலாம். சஸ்பென்ஸ், திரில்லர், காதல், காமெடி என அனைத்து வகையும் கொண்ட கலவையான புதிய வெளியீடுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள விவரங்களை பாருங்கள்.
ராடு ராடு குயின்ஸ்: தி செரிஸ்
காமெடி ஜானரில் உருவாகியுள்ள மினி வெப் தொடர் 'ராடு ராடு குயின்ஸ்: தி செரிஸ்'. கலக்கலான காமெடி காட்சிகள் நிறைந்த இத்தொடர் வரும் செப்டம்பர் 12ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.
யு அண்ட் எவேர்ய்திங் எல்ஸ்
கொரியன் டிராமா ரசிகர்களே, இந்த வார இறுதியில் ஒரு சிறந்த ரொமான்டிக் கொரியன் வெப் தொடரை காண ஆர்வமாக உள்ளீர்களா? அப்படியானால், ‘யு அண்ட் எவேர்ய்திங் எல்ஸ்’ என்ற புதிய வெப் தொடர் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.
தி ராங் பாரிஸ்
காமெடி, ரொமான்டிக் ஜானரில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'தி ராங் பாரிஸ்'. இப்படம் வரும் செப்டம்பர் 12ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.
அக சார்லி ஸீன்
ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள டாக்குமெண்டரி வெப் தொடர் 'அக சார்லி ஸீன்'. இத்தொடரின் முதல் சீசன் நேற்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.
கிஸ் ஓர் டை
நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகியுள்ள காமெடி, ரியாலிட்டி ஷோ கொரியன் வெப் தொடர் 'கிஸ் ஓர் டை'. இத்தொடரின் முதல் சீசனை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.