/indian-express-tamil/media/media_files/2025/08/28/istockphoto-1372099741-612x612-1-2025-08-28-12-58-39.jpg)
ஒவ்வொரு வாரமும் பல்வேறு விதமான திரைப்படங்களும், வெப் தொடர்களும் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. வெவ்வேறு ஜோனேர்களில் உருவாகும் இந்த வெளியீடுகள், ரசிகர்களை கவரும் வகையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. அதனைத் தொடர்ந்து, இந்த வாரம் எந்தெந்த புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் எந்த எந்த ஓடிடி தளங்களில் வெளியாகின்றன என்பதை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
கெவி - (சன் நெக்ஸ்ட்)
அறிமுக ஹீரோ ஆதவன், ஷீலா, ஜாக்குலின் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'கெவி', சாலை மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் வாழும் மலைப்பகுதி மக்களின் துயரமிக்க வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சமூக பிரச்சனைகளை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லும் இந்த திரைப்படம், மனிதாபிமானம் சார்ந்த ஒரு சமூக கருத்தைப் பதிவு செய்கிறது. 'கெவி' திரைப்படம் ஆகஸ்ட் 27ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியானது.
மாயக்கூத்து - (சன் நெக்ஸ்ட்)
இயக்குநராக அறிமுகமாகும் ஏ.ஆர். ராகவேந்திராவின் இயக்கத்தில், டெல்லி கணேஷ், மு. ராமசாமி, சாய் தீனா, நாகராஜன், முருகன், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மாயக்கூத்து’. ஒரு எழுத்தாளரின் கற்பனையில் உருவான கதாபாத்திரங்கள், உண்மையில் அவரது வீட்டை வந்து அணுகும் தனித்துவமான சூழ்நிலையில் நடக்கும் சம்பவங்களே இந்த கதையின் மையம். உண்மை மற்றும் கற்பனை இடையே கோடுகள் மங்கும் ஒரு ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. 'மாயக்கூத்து' ஆகஸ்ட் 27ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பாக் சாலே - (ஈடிவி வின்)
2023ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளியான 'பாக் சாலே' எனும் காமெடி மற்றும் குற்றவியல் அழுத்தமுள்ள திரைப்படம், தற்காலிகமாக திரையரங்குகளில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது, இந்த படம் ஆகஸ்ட் 28ஆம் தேதி ஈடிவி வின் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. நகைச்சுவையும் திருப்பங்களும் நிறைந்த இந்த தெலுங்கு திரைப்படம், தற்போது ஓடிடி பார்வையாளர்களுக்காக கிடைக்கிறது.
வசந்தி - (மனோரமா மேக்ஸ்)
2023ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் 'வசந்தி', ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் வசந்தியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பெண்ணின் எதிர்கொள்ளும் சவால்களும், உணர்ச்சிப்பூர்வமான அனுபவங்களும் இந்த கதையில் பிரதானமாகக் காட்டப்பட்டுள்ளன. வாழ்க்கை நிஜங்களை பிரதிபலிக்கும் இந்த படைப்பு, ஆகஸ்ட் 28ஆம் தேதி மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தி கிரோனிக்ல்ஸ் ஆப் தி 4.5 காங் - (சோனி லிவ்)
மலையாளத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த வெப் தொடர் ‘தி கிரோனிக்ல்ஸ் ஆப் தி 4.5 காங்’, தனித்துவமான கதைக்களத்துடன் ரசிகர்களை கவரக்கூடியதாக இருக்கிறது. சுவாரஸ்யமான சம்பவங்களும் ஹாஸ்யமுள்ள நிகழ்வுகளும் நிரம்பிய இந்த தொடர், ஆகஸ்ட் 29ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது.
கத பரஞ்ச கத - (மனோரமா மேக்ஸ்)
2018ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் ‘கத பரஞ்ச கத’, நகைச்சுவைத் துளிகளுடன் உருவாகிய ஒரு ரொமான்டிக் கதையம்சம் கொண்ட படமாகும். காதல், உணர்வுகள் மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாக கொண்டு முன்னேறும் இந்த படம், தற்போது ஓடிடி ரசிகர்களுக்காக ஆகஸ்ட் 29ஆம் தேதி மனோரமா மேக்ஸ் தளத்தில் வெளியிடப்பட உள்ளது.
சோதா - (ஜீ5)
கன்னட மொழியில் உருவாகியுள்ள 'சோதா' என்பது குற்றம் மற்றும் திரில்லர் அடிப்படையிலான வெப் தொடராகும். தீவிரமான போலீஸ் விசாரணையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடரில், இரகசியங்கள் மற்றும் திருப்பங்கள் நிறைந்த கதையமைப்பு காணப்படுகிறது. மிகுந்த த்ரில்லுடன் செல்லும் இத்தொகுப்பு, ஆகஸ்ட் 29ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது.
கிங்டம் - (நெட்பிளிக்ஸ்)
இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிங்டம்'. ஆக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த இந்த தெலுங்கு திரைப்படம் நேற்று 27ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.