/indian-express-tamil/media/media_files/2025/09/14/bharathiraja-2025-09-14-18-59-39.jpg)
திரைப்பட இசையமைப்பாளர் பரணி ஆரம்பத்தில் பாடலாசிரியராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். நடிகர் விஜய் நடித்த 'நாளைய தீர்ப்பு' (1992) திரைப்படத்தில் அவர் பாடல்களை எழுதியுள்ளார். அவரது இசைப்பயணத்தில், 'புதிய கீதை', 'சார்லி சாப்ளின்', 'விருமாண்டிக்கும் சிவகாமிக்கும்' போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். பல்வேறு மொழிகளிலும் பணியாற்றி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் பரணி. இந்நிலையில் தான் இசையமைத்த ஒரு பாடலுக்கு பாரதிராஜா தன்னை பாராட்டிய ஒரு சுவாரசியமான நிகழ்வினை எஸ்.எஸ். மியூசிக்குக்கு அளித்த பேட்டியில் அவர் விவரித்துள்ளார்.
இவர் எழுதிய அசைந்தாடும் காற்றுக்கும் பாடல்தான் அது. இந்த பாடல் பார்வை ஒன்றே போதும் படத்தில் இடம்பெற்று இன்றளவு மக்கள் வைப் செய்யும் பாடலாக உள்ளது. பார்வை ஒன்றே போதுமே திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளியான ஒரு காதல் திரைப்படம். முரளி கிருஷ்ணா எழுதி இயக்கிய இப்படத்தில் குணால், மோனல் மற்றும் கரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. படத்திற்கு இசையமைத்த பரணியின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
குறிப்பாக, இத்திரைப்படத்தில் இடம்பெற்ற "ஏ அசைந்தாடும் காற்றுக்கும்" பாடல், பெரும் வரவேற்பைப் பெற்றது. இசையமைப்பாளர் பரணி அவர்கள் இந்த பாடல் குறித்து, நேரலை (live) இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் பாடலை உருவாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பாடல் வெளியான பிறகு, தான் செல்லும் இடங்களிலெல்லாம் "பார்வை ஒன்றே போதுமே" பாடலே ஒலித்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குநர் பாரதிராஜா, இந்த பாடலை எழுதிய பரணியின் எளிமையான குணத்தைப் பார்த்து பெரிய ஆளுயா நீ, ரொம்ப சிம்பிளா இருக்க, எங்க போனாலும் இந்த பாட்டுதான் கேட்குது என்று பாராட்டியதாக பரணி கூறினார்.
தேனியில் உள்ள ஒரு கேசட் கடை உரிமையாளர், 'சின்னத்தம்பி' படத்திற்குப் பிறகு தனது கடையில் அதிகம் விற்பனையானது இந்தப் பாடலின் கேசட் தான் என்று கூறியதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். இந்தப் பாடலுக்கு பரதிராஜா உள்ளிட்ட பல பிரபலங்களிடமிருந்து பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. இந்த பாடல் மிகப்பெரிய வெற்றியடைந்ததால், பரணிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது. இந்த ஒரு பாடல் மட்டும் அல்லாமல், 'பார்வை ஒன்றே போதுமே' திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் அன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. குறிப்பாக "துளி துளியாய் கொட்டும் மழை", "திருடிய இதயத்தை" போன்ற பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.