இந்தியாவின் முதல் முறையாக மனிதக் குரங்கை மையப்படுத்தி தமிழில் எடுக்கப்பட்ட கபி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி உள்ளது.
ராட்சத காட்ஷீலா, ராட்சத திமிங்கலம், ராட்சத குரங்கு போன்ற படங்களை நாம் ஹாலிவுட்டில் தான் பார்த்து இருக்கிறோம்.இந்த படங்கள் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் முதன் முதலில் இந்தியாவில் அதுவும் தமிழில் கபி என்ற படத்தை மனிதக் குரங்கை வைத்து உருவாக்கியுள்ளனர்.இயக்குநர் கோகுல்ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். முதன் முறையாக அனிமேட்ரானிக்ஸ் மற்றும் விஷூவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்ப முறையில் இந்தியாவில் உருவாகும் படம் இது. அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய உருவாகியுள்ள இத்திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
கவுசிக்கரா மற்றும் என்.இராமசாமி இருவரும் இணைந்து கதை எழுதி உள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
அனிமேஷன் வகையில் மனித குரங்கை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் என்பதால் குழந்தைகளை இப்படம் வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”