இமைக்கா நொடிகள் படத்தை அந்த 4 காரணங்களுக்காக கட்டாயம் பார்க்க வேண்டும்..!

இமைக்கா நொடிகள் படத்திலும்   ரசிகர்ளுக்காக நிறைய சஸ்பென்ஸ் போஷன் இருக்கிறது .

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  இமைக்கா நொடிகள் திரைப்படம் நாளை (30.8.18) திரையரங்குகளில் வெளியாகுகிறது.

இமைக்கா நொடிகள்:

அருள்நிதி நடித்த ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து.ஹாரர் த்ரில்லர் படமான இது, விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.  அதனைத் தொடர்ந்து அஜய் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் இமைக்கா நொடிகள்  .

இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடைய தம்பியாக அதர்வா நடித்துள்ளார். நயன்தாரா ஜோடியாக கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.அத்துடன் பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் கஷ்யப் இப்படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார்.

நாளை வெளிவரவிருக்கும் இந்த திரைப்படம் குறித்து படத்தின் இயக்குனர் உணர்வுபூர்வமான பதிவு ஒன்றையும் தந்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் இரண்டரை ஆண்டு வலி, கடின உழைப்பு, அவமானங்கள், ஏமாற்றங்கள், வேடிக்கை, இக்கட்டான தருணங்கள் எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டன. எனது நம்பிக்கையை இழக்கவிடாமல், எனக்குப் பக்கபலமாக இருந்த எனது குழுவுக்கு மிகப்பெரிய நன்றிகள்” என்று கூறியுள்ளார்.

இமைக்கா நொடிகள்

சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள், ட்ரெய்லர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தனர். இந்த திரைப்படம் சைக்கோ கொலையாளி குறித்த கதை என்ற தகவல்களும் இணையத்தில் கசிந்துள்ளன. இந்நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் கட்டாயம் ஏன் மிஸ் பண்ண கூடாது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைத்தளம் 4 காரணங்களை கூறியுள்ளது.

இதோ 4 காரணங்கள்:

1.   கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டிமான்ட்டி காலனிக்கு பிறகு ‘இமைக்கா நொடிகள்’ படத்தை ஆரம்பித்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.  சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த படத்திற்காக  தனது முழு உழைப்பையும் போட்டுள்ளார்.

ஏழாம் அறிவு,  துப்பாக்கி படங்களில்  உதவி இயக்குனராக பணிப்புரிந்து விட்டு, தனது முதம் படமான டிமான்ட்டி காலனியில்  ரசிகர்களிடம் கைதட்டல்களை வாங்கி  தவிர்க்க முடியாத இளம் இயக்குனராக மாறிய அஜய் ஞானமுத்து  உழைப்பிற்காக..

2.  தமிழ் சினிமாவில் த்ரில்லார் மூவிக்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகம்.  சமீபத்தில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள், குற்றம் 23 போன்ற படங்களில் காட்டப்பட்ட சஸ்பென்ஸ் ப்ளஸ் த்ரில்லர்  ரசிகர்களை சீட்டுக்கு நுனியில் அமர வைத்துவிடும்.   இந்த படங்களை போல் இமைக்கா நொடிகள் படத்திலும்   ரசிகர்ளுக்காக நிறைய சஸ்பென்ஸ் போஷன் இருக்கிறது .

3. அனுராக் கஷ்யப் :  பாலிவுட்டில் தவிர்க்க முடியாத இயக்குனரும், நடிகருமாக இருப்பவர் அனுராக் கஷ்யப். பாலிவுட்டில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.  ஆவணப்படங்கள், சினிமாவில் பலரும்  காட்ட யோசிக்கும்   உண்மைகளை தைரியமாக தனது படத்தில்  காட்ட கூடியவர். இவர் முதன்முதலாக தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் தான் இமைக்கா நொடிகள்.

4. நயன்தாரா:  தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன் தாராவின் படத்திற்கு கிடைக்கும் ஓப்பனிங் பிரமிக்க வைக்கக் கூடியது.   உச்ச நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் ஓப்பனிங் போல் நயன் தாராவின் ஃபர்ஸ் டே ஷோ இருக்கும்.   சமீபத்தில் வெளியான கோலமாவு கோகிலா சூப்பர் டூப்பர் ஹிட். அதன் வெற்றிக்கு பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால் படம் குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருமடங்காக உள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close