காலா மற்றும் ரஜினிகாந்த் பற்றி இயக்குநர் பா.இரஞ்சித் கூறும் 5 விஷயங்கள்!

ஜூன் 7ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ரஜினி மற்றும் படத்தை பற்றி இயக்குநர் இரஞ்சித் 5 விஷயங்கள் கூறுகிறார்.

தமிழகம் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘காலா’ திரைப்படம் வரும் 7ம் தேதி வியாழன் கிழமை அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்நிலையில், திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் காலா திரைப்படத்தை பற்றி இயக்குநர் பா. இரஞ்சித் 5 விஷயங்களை பகிர்ந்துக்கொள்கிறார்.

‘காலா’ படத்தில் ரஜினிகாந்த் எப்படிப்பட்டவர்?

நடிகர் ரஜினிகாந்த். தனிமையில் அவருடன் பேசியவரை அவர் மிகவும் உணர்ச்சி மிகுந்தவர் மற்றும் பன்பானவர். சினிமாவில் இருக்கும் ரஜினியை விட நிஜ வாழ்க்கையில் அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். அந்த பலத்தை இந்த படத்தில் கொண்டு வர நான் பெரிய முயற்சி எடுத்திருக்கிறேன்.

காலா எதைப்பற்றிய படம்?

காலா படமும் கமெர்ஷியல் படம் தான். ஆனால் இதில் முழுக்க முழுக்க மக்களின் பிரச்சனை பேசப்பட்டுள்ளது. ஏனென்றால் ரஜினிகாந்த் அவர்களின் குரலில் உள்ள வலிமையை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்த வேண்டும். அதை தான் இதில் செய்திருக்கிறேன்.

காலா திரைப்படத்திற்கு பின்னால் எத்தனை நபர்கள் வேலைப் பார்த்திருக்கிறார்கள்?

‘காலா’ படத்திற்காக செட் உருவாக்கத்தில் ஒரு நாள் மட்டுமே 800 தொழிலாளர்கள் வேலை பார்த்தார்கள். இந்த படத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் எந்த வித சலிப்பும் காட்டாமல் 80 நாட்கள் தொடர்ந்து உழைத்துள்ளனர். காலா படத்திற்காக உழைத்த அனைவருக்கும் எனது நன்றியை கூற கடமைப்பட்டுள்ளேன்.

காலா படத்தின் அரசியல்…?

kaala

காலா படத்தில் அரசியல் உள்ளது ஆனால் இது முழுமையாக அரசியல் படம் கிடையாது. இந்த படத்தில் மக்களின் நிலம் மற்றும் நிலம் சார்ந்த அரசியல் குறித்து பேசப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் சமமாக இருக்கவும், ஒருவரை ஒருவர் சமமாக நடத்த வேண்டிய கருத்தை மக்களிடமே கொண்டு சேர்க்க ‘காலா’ படம் ஒரு சிறிய முயற்சி.

 

காலா படத்தின் இன்ஸ்பிரேஷன் எங்கிருந்து வந்தது?

Rajini Kaala Opening song leaked

காலா படம் கற்பனை கதை. மும்பை தாராவியில் வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கை குறித்த ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை.

 

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Five things director pa ranjith said about kaala and rajinikanth

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com