Advertisment

கொரோனாவுக்கு அடுத்த பலி: பிரபல நடிகர் மரணம்

என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தரமணி, சத்ரியன், கொடிவீரன், தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

author-image
WebDesk
Sep 15, 2020 11:47 IST
Florent C Pereira passed away

Florent C Pereira passed away

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமானார்.

Advertisment

கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நிகழும் பிரபலங்களின் மறைவு மக்களை மிகவும் பாதித்துள்ளது. அந்த வகையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகரும் கலைஞர் டிவியின் முன்னாள் ஜெனரல் மேனேஜராகவும் இருந்த ஃபிளோரன்ட் பெரைரா நேற்று (14/09/2020) மரணமடைந்தார்.

இவர் என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தரமணி, சத்ரியன், கொடிவீரன், தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்து இருக்கிறார். சமீபத்தில் பாஜக-விலும் இணைந்தார்.

இவரது மறைவுக்கு இயக்குநர்களும், நடிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

#Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment