ஐதரபாத்தில் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகை தமன்னா மீது இளைஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நடிகை தமன்னா, பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/01/tamnna_1517186928-300x233.jpg)
ஐதரபாத்தில் நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை தமன்னா கலந்துகொண்டார். அப்போது, நகைக்கடையிலிருந்து வெளியே வரும்போது, அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தமன்னாவை நோக்கி காலணியை வீசியுள்ளார். ஆனால், அந்த காலணி நகைக்கடையின் ஊழியர் மீது பட்டு கீழே விழுந்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/01/tammna_1517186928-300x233.jpg)
இதையடுத்து, அந்நபரை காவல் துறையினர் பிடித்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் முஷீர்பாத் பகுதியை சேர்ந்த பி.டெக். பட்டதாரி கரிமுல்லா (31) என்பது தெரியவந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2018/01/tamnna-2_1517186928-300x233.jpg)
மேலும், நடிகை தமன்னா சமீப காலமாக திரைப்படங்களில் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் தனக்கு விரக்தியை ஏற்படுத்தியதால் தான் அவ்வாறு செய்ததாக கரிமுல்லா தெரிவித்ததாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து, நகைக்கடை ஊழியர் அளித்த புகாரின்பேரில், கரிமுல்லா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.