பிக் பாஸ் சீசன் 7ல் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் அமீரின் சகோதரி போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/72be28de-8e3.jpg)
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ஷோவான பிக் பாஸ் சீசன் 7 இன்று தொடங்கியுள்ளது. கடந்த சீசன்களைப் போலவே இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
/indian-express-tamil/media/post_attachments/4c119371-234.jpg)
பிக் பாஸ் தமிழ் 7 அறிவிக்கப்பட்டதிலிருந்து, கமல்ஹாசனின் நிகழ்ச்சியில் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்து பெரிய ஊகங்கள் இருந்து வந்தன. இந்த ஆண்டு பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியில் அசத்தலான நடிகை ஐஷு ஏ.டி.எஸ் போட்டியாளராகக் காணப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/a5f7b4d8-111.jpg)
அந்தவகையில் இன்று ஐஷூ போட்டியாளராக களமிறங்கியுள்ளார். பிக் பாஸ் தமிழ் 5 போட்டியாளர் அமீரின் சகோதரி தான் இந்த ஐஷு ஏ.டி.எஸ். ஊட்டியைச் சேர்ந்த நடன கலைஞரான இவர் விஜய் டிவியின் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். 23 வயதான ஐஷூ தற்போது பிக் பாஸ் போட்டியில் களமிறங்கியுள்ளார். அவர் ஒரு பயண ஆர்வலர் மற்றும் பல்வேறு இடங்களை ஆராய்வதை விரும்புகிறார்.
/indian-express-tamil/media/post_attachments/7dcd0ad5-aba.jpg)
ஐஷுவைத் தவிர, பிக் பாஸ் தமிழ் 7 இல் மாயா கிருஷ்ணன், ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன், விஷ்ணு விஜய், மணிச்சந்திரா, ஜோவிகா விஜய்குமார், பூர்ணிமா ரவி, வினுஷா தேவி, அக்ஷயா உதயகுமார், சரவண விக்ரம், அனன்யா. ராவ் மற்றும் விஜய் வர்மா ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“