/tamil-ie/media/media_files/uploads/2020/07/Friendship-movie-Superstar-Anthem-Simbu.jpg)
Friendship movie, Superstar Anthem, Simbu
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் ‘ஃபிரெண்ட்ஷிப்’. நடிகர் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், பிக் பாஸில் கலந்துக் கொண்ட லாஸ்லியா, நடிகையாக அறிமுகமாகிறார். இதனை சென்னையில் ஒருநாள், அக்னி தேவி ஆகியப்படங்களை இயக்கிய ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கியுள்ளனர்.
Tamil News Today Live: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்வு
கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கொரோனா ஊரடங்கால் இன்னும் முடிவடையவில்லை. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
அதில் ரஜினிகாந்த் (Superstar Anthem) என்ற, ஃபிரெண்ட்ஷிப் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. சிம்பு பாடியிருக்கும் இந்தப் பாடலை ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்டார். ரஜினிகாந்துக்காக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கறந்த பாலை அப்படியே குடிப்பது நல்லதா? ஷாக் ஆய்வு
ரஜினி சட்டை கையை மடித்து விடும் ஸ்டைல், சிகரெட் பிடிப்பது போன்ற அவரின் தனித்தன்மைகளை உள்ளடக்கியதாக இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது. ’மாரு மேல சூப்பர் ஸ்டார், நரம்புக்குள்ள சூப்பர் ஸ்டார்’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை இதுவரை 26 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் யூ ட்யூபில் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.