Advertisment

ஆடம்பர மாளிகை முதல் சொகுசு கார்கள் வரை : நடிகர் ரஜினிகாந்தின் நிகர சொத்து மதிப்பு என்ன?

கூலியாக இருந்து தச்சராக மாறி பஸ் கண்டக்டராக வேலை பார்த்த நடிகர் ரஜினிகாந்தின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு $53 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. தொண்டு மற்றும் பிற மனிதநேய முயற்சிகளுக்கு பெரும் தொகை செலவிட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
Rajinikanth Life

நடிகர் ரஜினிகாந்த்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் இவரும் இவர், பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக திகழ்கிறார். பஸ் கண்டக்டராக இருந்து புகழின் உச்சிக்கு சென்றுள்ள இவரது வாழ்க்கை பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக உள்ளது. அவரது அடக்கமான தோற்றம் முதல் நட்சத்திர அந்தஸ்து வரை ரஜினிகாந்தின் குறிப்பிடத்தக்க வாழ்க்கை குறிப்புகளை பார்ப்போம்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க : From a lavish Rs 35 crore mansion to a fleet of luxurious cars, here’s a look at what contributes to Rajinikanth’s Rs 400 crore net worth

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி

டிசம்பர் 12, 1950 அன்று பெங்களூரில் ஒரு சாதாரண மராத்தி குடும்பத்தில் பிறந்தவர் சிவாஜி ராவ் கெய்க்வாட். அவரது ஆரம்ப ஆண்டுகளில் பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், அவர் நெகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் இருந்துள்ளார். கூலி, தச்சர் என பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு, ரஜினிகாந்த் தனது வாழ்வாதாரத்தை சமாளித்துள்ளார்.தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு, பெங்களூருவில் உள்ள கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராகப் பணியாற்றினார்.

இந்த காலகட்டத்தில்தான் சக பேருந்து ஓட்டுநராக இருந்த அவரது நண்பரான ராஜ் பகதூர் ஆதரவுடன் அவர் தனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொள்ளத் தொடங்கினார். தனது திறமையை உணர்ந்த ரஜினிகாந்த் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தார். அவரது திறமையால் கவரப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் கே பாலச்சந்தர் அவருக்கு ரஜினிகாந்த்என்ற பெயரை சூட்டி, 1975 தான் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகம் செய்தார். இது அவரின் வாழ்க்கையில் ஒரு சிறந்த தொடக்கத்தைக் கொடுத்தது.

சினிமாவில் நுழைவு

ரஜினிகாந்தின் நடிப்பு முயற்சி மேடையில் தொடங்கியது, அங்கு அவர் ஒரு நடிகராக தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார். பிளாக்பஸ்டர் திரைப்படமான "பைரவி" (1978) படத்தில் அவர் நடித்த கேரக்டர் அவரை நட்சத்திரமாக உயர்த்தியது மற்றும் அவருக்கு "சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை பெற்றுத் தந்தது. அவர் 1980கள் மற்றும் 1990களில் பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார். புவனா ஒரு கேள்வி குறி, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், பில்லா, மூன்று முகம், நல்லவனுக்கு நல்லவன், படிக்காதவன், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது."முள்ளும் மலரும்," "பில்லா", "தளபதி," மற்றும் "அண்ணாமலை" போன்ற திரைப்படங்கள் ஒரு நடிகராக அவரது பன்முகத் திறனை வெளிப்படுத்தி, இந்தியத் திரையுலகில் அவருக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தன. 200 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றினார். காலா, லிங்கா, சிவாஜி: தி பாஸ், அண்ணாத்தே, பேட்ட, தர்பார், ரோபோ, கபாலி, ரோபோ 2.0 ஆகிய படங்கள் அதிக வசூல் செய்தது.

ரஜினிகாந்தின் நிகர மதிப்பு

கூலியாக இருந்து தச்சுத் தொழிலுக்கு மாறியது, பின்னர் அவரது நடிப்பு பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு பஸ் கண்டக்டராக பணியாற்றினார், ரஜினிகாந்தின் தற்போதைய நிகர மதிப்பு 53 மில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், அவரது வருவாயில் கணிசமான பகுதி தொண்டு முயற்சிகள் மற்றும் சில காரணங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் 50 முதல் 60 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.

சொத்துக்கள்

ரஜினிகாந்த் சென்னையில் 35 முதல் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான அருமையான குடியிருப்பும், 10 முதல் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள செழுமையான அடுக்குமாடி குடியிருப்பும் வைத்துள்ளார். ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற இவர், டொயோட்டா இன்னோவா, ரேஞ்ச் ரோவர், ரூ.22 கோடி மதிப்புள்ள பென்ட்லி லிமோசின், ரூ. 3.1 கோடி மதிப்புள்ள லம்போர்கினி உருஸ், ரூ.16.5 கோடி மதிப்புள்ள பாண்டம், ரூ. 6 மதிப்புள்ள பேண்டம், ரூ.2.8 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் உள்ளிட்ட சொகுசு வாகனங்களை வைத்துள்ளார்.

குடும்பம் மற்றும் வாழ்க்கை முறை

ரஜினிகாந்த் லதா ரங்காச்சாரியை திருமணம் செய்து கொண்டார், அவர் முதலில் தனது கல்லூரி இதழுக்காக ரஜினிகாந்தை நேர்காணல் செய்தார். அப்போது அவர் மீது காதல்வயப்பட்ட ரஜினிகாந்த் அவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்ற இரு மகள்கள் உள்ளனர். ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு எல்லையே இல்லை; தென்னிந்தியா முழுவதும் உள்ள கோவில்களில் கூட அவர் போற்றப்படுகிறார். பல்வேறு சமூகக் காரணங்களுக்காக தொடர்ந்து பங்களித்து வரும் ரஜினிகாந்த், பல ஆண்டுகளாக பல தொண்டு நிறுவனங்களுக்கு தாராளமாக ஆதரவளித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Superstar Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment