எம்.ஜி.ஆர் - கேப்டன் கூட்டணி; என்னோட இமேஜை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்: நடிக்க மறுத்து ட்விஸ்ட் வைத்த மக்கள் திலகம்!

1977-ல் நின்றுபோன 'அண்ணா நீ என் தெய்வம்' திரைப்படம், எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு 1990-ல் 'அவசர போலீஸ் 100' என்ற தலைப்பில் வெளியானது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இயக்குநர் பாக்கியராஜ் பகிர்ந்துள்ளார்.

1977-ல் நின்றுபோன 'அண்ணா நீ என் தெய்வம்' திரைப்படம், எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு 1990-ல் 'அவசர போலீஸ் 100' என்ற தலைப்பில் வெளியானது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இயக்குநர் பாக்கியராஜ் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
mgr vijayakanth

1970-களில் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் 'உரிமைக்குரல்', 'மீனவ நண்பன்' போன்ற வெற்றிப் படங்களில் நடித்த எம்.ஜி.ஆர்., அடுத்ததாக 'அண்ணா நீ என் தெய்வம்' படத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்தப் படத்தின் டைட்டில் அண்ணாவைக் குறிப்பதாக இருந்தாலும், கதைக்களம் அண்ணன்-தங்கை பாசத்தையும் பழிவாங்கும் உணர்வையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது.

Advertisment

படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, அரசியல் களத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த எம்.ஜி.ஆர்., அப்போது தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதனால் 'அண்ணா நீ என் தெய்வம்' திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. கிட்டத்தட்ட கால்வாசிப் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இந்தப் படம் 1977-ம் ஆண்டு அப்படியே நின்று போனது.

திரைக்கதை மன்னன் எனப் புகழப்படும் பாக்யராஜ், அந்த சமயத்தில் 'சுவரில்லாத சித்திரங்கள்', 'மெளன கீதங்கள்', 'அந்த 7 நாட்கள்' போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநராக வலம் வந்தார். அப்போது கைவிடப்பட்ட 'அண்ணா நீ என் தெய்வம்' படம் குறித்துப் பேசப்பட்ட தகவல்கள் அவருக்குக் கவலையை ஏற்படுத்தின. எம்.ஜி.ஆர். நடித்த காட்சிகளைப் பார்த்த பாக்யராஜ், அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு புதிய கதையை உருவாக்கும் முடிவை எடுத்தார் பாக்கியராஜ். "எம்.ஜி.ஆர். போன்ற பெரியவர், ஒரு வேலையை முடிக்காமல் பாதியில் விட்டுவிட்டார் என்று பேச்சு வருவது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால், நான் ஒரு புதிய ஸ்கிரிப்ட் தயார் செய்கிறேன்," என்று அவர் கூறினார்.

பாக்யராஜின் இந்த முடிவை அறிந்த எம்.ஜி.ஆர்., முதலில் தயக்கம் காட்டினார். "என்னுடைய பிம்பத்தை அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கொடுத்துவிட மாட்டேன். அந்தப் படத்தை விஜயகாந்த்தை வைத்து முடிக்க வேண்டாம்," என்று பாக்யராஜிடம் கூறிய அவர், "உன்னால் முடிந்தால் அந்தப் படத்தை முடி. இல்லை என்றால் தூக்கிப் போடு, பணத்தை நான் கொடுத்துவிடுகிறேன்," என்று உறுதியாகவும் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

எம்.ஜி.ஆரின் இந்தச் சவாலை ஏற்றுக்கொண்ட பாக்யராஜ், புதிய திரைக்கதையை உருவாக்கினார். அந்தக் கதையில், எம்.ஜி.ஆர். நடித்த காட்சிகள் அனைத்தையும் இணைத்தார். அத்துடன், எம்.ஜி.ஆரின் தங்கையின் மகனாக இரண்டு வேடங்களில் தானும் நடிக்க முடிவு செய்தார். ஒரு பாக்யராஜ் கதாபாத்திரம் நகைச்சுவையாகவும், மற்றொரு பாக்யராஜ் கதாபாத்திரம் தைரியமாகவும் இருக்கும்படி கதை அமைந்தது. இந்தப் புதிய யோசனையைக் கேட்ட எம்.ஜி.ஆர்., பாக்யராஜைப் வெகுவாகப் பாராட்டினார்.

சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டியளித்த இயக்குநர் பாக்கியராஜ், ”அண்ணா என் தெய்வம்” படம் உருவான விதம் குறித்து பேசியிருந்தார். எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கும்போதே இந்தப் படத்தை வெளியிட முடியாமல் போனதே என்கிற வருத்தம் இன்றைக்கும் உண்டு’ என்று தெரிவித்தார். 77ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆர், 87ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தார். அந்த வருடம் காலமானார். அதன் பின்னர் 90ம் ஆண்டில்தான் ‘அவசர போலீஸ் 100’ படம் வெளியானது. 

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: