'குச்சி குச்சி ராக்கம்மா' 7 வயதில் ஹிட் பாடல் பாடிய சிறுமி; இப்போ எப்படி இருக்கார் பாருங்க!

7 வயதில் "குச்சி குச்சி ரக்கம்மா" என்ற பாடலின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, இன்று பக்தி இசை உலகில் தனக்கென தனி முத்திரையைப் பதித்திருக்கும் சாரதாவின் பயணம் வியக்கத்தக்கது.

7 வயதில் "குச்சி குச்சி ரக்கம்மா" என்ற பாடலின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, இன்று பக்தி இசை உலகில் தனக்கென தனி முத்திரையைப் பதித்திருக்கும் சாரதாவின் பயணம் வியக்கத்தக்கது.

author-image
WebDesk
New Update
Singer Bombay Sharadha

'குச்சி குச்சி ரக்கம்மா' 7 வயதில் ஹிட் பாடல் பாடிய சிறுமி; இப்போ எப்படி இருக்கார் பாருங்க!

குரலில் தெய்வீகத்தையும், பேச்சில் எளிமையையும் கொண்டுள்ள பாடகி பம்பாய் சாரதா, தனது இசைப் பயணத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையின் சுவாரஸ்யமான பக்கங்களையும் கலாட்டா பிங்க் நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார். 7 வயதில் "குச்சி குச்சி ரக்கம்மா" என்ற பாடலின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, இன்று பக்தி இசை உலகில் தனக்கென தனி முத்திரையைப் பதித்திருக்கும் அவரது பயணம் வியக்கத்தக்கது.

Advertisment

"குச்சி குச்சி ரக்கம்மா" பாடலைப் பாடும்போது தனக்கு ஏழு வயது இருந்ததாகவும், இரவு 12:30 மணியளவில் ஹஸ்கி வாய்ஸில் அந்த பாடலை பாடியதாகவும் சாரதா கூறினார். "அச்சம் மச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை" போன்ற பல பாடல்களையும் சாரதா பாடியுள்ளார். சினிமா பாடல்களை விட பக்தி பாடல்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பதாகவும், பக்திப் பாடல்கள் பாடுவது தானாக அமைந்தது என்றும்  சாரதா தெரிவித்தார்.

சிறு வயதிலேயே கர்நாடக இசையில் முறைப்படி பயிற்சி பெற்றிருந்தாலும், பக்தி பாடகியாக உருவெடுத்தது தற்செயலான நிகழ்வு என்று கூறிய சாரதா, நான் பாடிய சில பக்திப் பாடல்கள் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும் என்று நான் நினைக்கவில்லை. அது கடவுள் எனக்குக் கொடுத்த பரிசு என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

எனது தொழில் வாழ்க்கையைப் போல, தனிப்பட்ட வாழ்க்கையும் பல சுவாரஸ்யமான தருணங்களால் நிறைந்துள்ளது. பிரசவ வலியின்போதும் கச்சேரியில் மயங்கி விழுந்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார். "என் அம்மா உண்மையான சிங்கப் பெண். எந்த சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொள்ளக்கூடியவர்," என்று தனது தாயை வர்ணிப்பது, அவரது குடும்பத்தின் மீதான அன்பையும் மரியாதையையும் காட்டுகிறது.

Advertisment
Advertisements

வாடகை வீட்டில் தொடங்கி, 6 வருடங்களுக்குப் பிறகு அதே வீடு சொந்தமான கதையை சொல்லும்போது, வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய அவரது புரிதல் புலனாகிறது. சாகச விளையாட்டுகளான ஸ்கை டைவிங், பாரா கிளைடிங் ஆகியவற்றில் பங்கேற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில், தனக்கு உயரத்தைப் பார்த்தால் பயம் என்பதையும் அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

நேர்காணலின் இறுதியில் அவர் பாடிய "வருவாண்டி தருவாண்டி மலையாண்டி" என்ற பாடல், அவரது குரலின் இனிமைக்கும், பக்தியின் ஆழத்திற்கும் ஒரு சான்றாக அமைந்தது. பம்பாய் சாரதா, தனது இனிமையான குரலாலும், எளிமையான பேச்சாலும், லட்சக்கணக்கான இதயங்களில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: