புகை, மது பழக்கம் கூடாது, எம்.ஜி.ஆர் கொள்கையை கைவிட்ட ஒரே படம் இதுதான்: காண கிடைக்காத அரிய காட்சி!

எம்.ஜி.ஆர் பொதுவாக தனது படங்களில் புகைபிடிக்க மாட்டார்; 'அந்தமான் கைதி' (1952) படத்தில் எம்.ஜி.ஆர் பீடி பிடிப்பது போலவும், 'மலைக்கள்ளன்' போன்ற ஒன்றிரண்டு படங்களில் புகைபிடிப்பது போலவும் நடித்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர் பொதுவாக தனது படங்களில் புகைபிடிக்க மாட்டார்; 'அந்தமான் கைதி' (1952) படத்தில் எம்.ஜி.ஆர் பீடி பிடிப்பது போலவும், 'மலைக்கள்ளன்' போன்ற ஒன்றிரண்டு படங்களில் புகைபிடிப்பது போலவும் நடித்திருக்கிறார்.

author-image
WebDesk
New Update
MGR

புகை, மது பழக்கம் கூடாது, எம்.ஜி.ஆர் கொள்கையை கைவிட்ட ஒரே படம் இதுதான்: காண கிடைக்காத அரிய காட்சி!

தமிழ் சினிமாவில் சின்னப்பா பாகவதர் காலம் முதல் இன்று வரை சிகரெட் பிடிக்கும் காட்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பொதுமக்களிடம் மிக வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் துறைகளில் சினிமா ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. திரைப்படங்களில் காட்டப்படும் எந்த ஒரு செயலும் மக்களால் பின்பற்றப்படும், பிரபலமாகும். ஒரு ஆய்வின்படி, சிகரெட் பிடிப்பதை நமது சமூகத்தில் சாதாரணமான ஒன்றாக மாற்றியதில் திரைப்படங்களுக்கு ஒரு பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisment

1931-ல் வெளியான முதல் பேசும் படமான 'காளிதாஸ்' படத்திலேயே, ஒரு பிரபு ஹிந்துஸ்தானி நடனத்தைப் பார்த்தபடி புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. 'வீர ரமணி' (1939) திரைப்படத்தில், நடிகை கே.டி.ருக்மணி சுருள் சுருளாகப் புகை விட்டபடி சிகரெட் பிடிக்கும் காட்சி, அப்போது ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டுள்ளது.

காதல் தோல்வி மற்றும் சோகம்:

சினிமாவில் காதல் தோல்வி அல்லது வாழ்க்கைப் பிரச்சனைகள் வந்தால், கதாநாயகர்கள் தாடி வளர்த்துக்கொண்டு, மது அருந்தியோ அல்லது புகைபிடித்தோ தங்கள் சோகத்தை மறப்பதாகக் காண்பிக்கும் வழக்கம் இருந்தது. 'தேவதாஸ்', 'வாழ்வே மாயம்' போன்ற படங்கள் இதற்கு உதாரணமாகும். இதன் காரணமாக, புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத இளைஞர்களும் கவலைகளை மறக்க இதை ஒரு வழியாகப் பார்க்கத் தொடங்கினர்.

சினிமாவில் ஹீரோயிசம்:

சுதந்திரத்திற்குப் பிறகு, திரைப்படங்களுக்கு தணிக்கை விதிகள் (Censor rules) வகுக்கப்பட்டன. இதில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் தொடர்பான விதிகளும் இருந்தபோதிலும், அவை பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்றோர் கதாநாயகர்களாக உருவானபோது, புகைபிடிப்பது ஹீரோயிசத்தின் ஒரு அம்சமாகக் கருதப்பட்டது. எம்.ஜி.ஆர் பொதுவாக தனது படங்களில் புகைபிடிப்பது போல் நடிக்க மாட்டார்.

Advertisment
Advertisements

'அந்தமான் கைதி' (1952) படத்தில் எம்.ஜி.ஆர் பீடி பிடிப்பது போலவும், 'மலைக்கள்ளன்' போன்ற ஒன்றிரண்டு படங்களில் புகைபிடிப்பது போலவும் நடித்திருக்கிறார். 'ஒளிவிளக்கு' படத்தில் மது அருந்தும் காட்சியில் நடித்தபோது, ரசிகர்களிடம் தனக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, "தைரியமாகச் சொல், நீ மனிதன் தானா?" என்று அவரது மனசாட்சியே அவரைக் கண்டிப்பது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டது. 'நினைத்ததை முடிப்பவன்' படத்தில் மது அருந்திவிட்டு, சிகரெட் பிடிப்பது போல நடித்திருப்பார். 

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: