தமிழ் சினிமாவில் குறுகியாக காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்தவர் தான் சிவகார்த்திகேயன். இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்துள்ள அவர் ரெமோ மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பிறகு வெளியான காக்கிச்சட்டை உள்ளிட்ட சில படங்களில் ஆக்ஷன் அவதாரம் எடுத்து மாஸ் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.
ஆங்கிலத்தில் படிக்க : From mimicry artist to Amaran, why Sivakarthikeyan’s journey is as rare as hen’s teeth in Tamil cinema
தற்போதைய ரசிகர்கள் மத்தியில் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன், தொடக்கத்தில் ஒரு மிமிக்ரி கலைஞராக இருந்த அவரது கடந்த காலத்தைப் பற்றி பல இளம் ரசிகர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். படங்களை தேர்வு செய்வதில் சிவா கவனத்துடன் இருப்பதால் தான் அவர் இந்த நிலையில் இருக்கிறார். நகைச்சுவை படங்களுக்கு பெயர் பெற்ற அவுட் அண்ட் அவுட் என்டர்டெய்னராக இருந்தாலும், நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தை தற்போது கடந்து வந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக, பல நகைச்சுவை நடிகர்கள் ஒரு ஹீரோவாக மாற முயற்சித்துள்ளனர், இதற்கு ஒரு சிறந்த உதாரணம் வடிவேலு. அவரது ஆரம்ப முயற்சியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, உடனடி வெற்றியைப் பெற்றாலும், அதைத் தொடர்ந்து வந்த இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன் மற்றும் எலி ஆகிய படங்கள் மோசமான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதேபோல் மறைந்த நடிகர் விவேக், வடிவேலுவுக்கு முன்பே நாயகனாக மாறினார்.
1991 ஆம் ஆண்டு செந்தூர தேவி என்ற திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்தார். கந்தா கடம்பா கதிர்வேலா, விரலுக்கேத்த வீக்கம் படங்களில் வடிவேலு விவேக் இருவருமே முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். மகனே மருமகனே, நான் தான் பாலா மற்றும் ஏழுமீன் ஆகிய படங்களில் விவேக் நாயகனாக நடித்திருந்தார். ஆனால் அவரின் தீவிர ரசிகர் கூட அந்த படங்களை பார்த்திருக்க மாட்டார்கள். அதேபோல் வெள்ளைப்பூக்கள் படத்தில் விவேக் ஹீரோவாக நடித்தார். அமெரிக்காவில் ஒரு குற்றத்தை ஆய்வு செய்யும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக, சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
தமிழில் காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்தாலும் சிவகார்த்திகேயனைப் போல ஒரு நட்சத்திரமாக அவர்களால் உருவாகவே முடியாது. வடிவேலு அல்லது விவேக் காக்கி சட்டை போன்ற ஒரு போலீஸ் அதிரடி படத்தில் அல்லது வருடப்படாத வாலிபர் சங்கம் போன்ற வேடிக்கையான நகைச்சுவை படத்தில் நடிப்பதை கற்பனை செய்வது கடினம். ஹீரோவாக ஹிட் அடித்த சந்தானம் கூட காமெடியன் என்ற இமேஜிலிருந்து வெளிவர முடியாமல் தவித்து வருகிறார்.
அவரது சமீபத்திய படங்கள், அவரை முன்னணி நடிகராகக் கொண்டவை, தற்போது சந்தானம் ஒரு அதிரடி ஹீரோவாக மாறுவதற்கான எந்த முயற்சியும் பார்வையாளர்களால் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சந்தானம் ஒரு சிறந்த மாஸ் ஹீரோவாக இருக்க முயற்சித்ததற்கு சக்க போடு போடு ராஜா ஒரு சிறந்த உதாரணம். அதன்பிறகு வந்த ஏ1, தில்லுக்கு துட்டு, மற்றும் டிக்கிலோனா போன்ற படங்களில் சந்தானம் தனது காமெடி மண்டலத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் சந்தானத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
அதே சமயம் தமிழ் தொலைக்காட்சியில் மிமிக்ரி கலைஞராக தனது ஆரம்ப வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன், ஒரு நட்சத்திரமாக மாற முடிந்தது. சிவகார்த்திகேயனுக்கு முன் நகைச்சுவை நடிகராகத்தான் அறிமுகமானார். தமிழில் சந்திரபாபு தொடங்கி நாகேஷ் முதல் வடிவேலு வரை ஒவ்வொரு நகைச்சுவை நடிகரும் தனித்தனியான உடல்மொழியை வளர்த்துக்கொண்டனர். இது அவர்களின் கேரக்டர்களுக்கு அப்பால் நீட்டிக்கப்பட்டது. அவர்களின் அசைவுகள், நடைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் அவர்களின் நிஜ வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியது.
இதன் காரணமாகத்தான் வடிவேலு நிகழ்வுகளில் பேசுவது கூட அவரது நகைச்சுவைப் படங்களைப் போலவே கலவரமாக இருக்கும். சிவா இப்படிப்பட்ட பழக்கவழக்கங்களை கேலி செய்து பிழைப்பு நடத்தியதால் காமெடி நடிகர் என்ற பிம்பத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் மீண்டு வந்துள்ளார். அவர் ஒரு மிமிக்ரி கலைஞராக இருந்தபோது வடிவேலுவின் உடல் மொழியைப் பின்பற்றி இருந்தால், அவர் ஒருபோதும் சொந்தமாக ஒரு பாணியை உருவாக்கி இருக்க முடியாது.. அவர் மிமிக்ரி கலைஞராக இருந்த காலகட்டத்தின் வீடியோக்கள் யூடியூப்பில் இன்னும் நிரம்பியுள்ளது.
சிவாஜி கணேசன், கவுண்டமணி முதல் விஜயகாந்த் வரை உருவகப்படுத்திய சிவா, ஒருவகையில் பல தனிமனிதர்களின் பழக்கவழக்கங்களை வாழ்க்கைக்காக ஏற்றுக்கொண்டவர். ஒருவேளை, அவர் மாஸ் ஹீரோவாக மாற அதுதான் காரணமாக இருக்கலாம், அவரால் தனக்கென தனித்துவமான ஒன்றைக் கொண்டு வர முடிந்தது. தற்போது அமரன் படத்தின் மூலம் ஒரு பக்கா மாஸ் ஹீரோவாக என்டரி கொடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.