/indian-express-tamil/media/media_files/2025/09/05/sun-tv-new-serials-2025-09-05-15-19-44.jpg)
மீண்டும் பக்தி மயமாகும் சின்னத்திரை; 3 பக்தி சீரியல்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பு; எந்த சேனல் தெரியுமா?
சின்னத்திரை உலகில், சன் டிவிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல்கள், சுவாரசியமான ரியாலிட்டி ஷோக்கள் என ஒவ்வொரு நாளும் பார்வையாளர்களை தன்வசம் ஈர்த்து வருகிறது. "சாயங்காலம் 6 மணிக்கு மேல சன் டிவியை போடுங்கப்பா!" என்ற குரல் ஒலிக்கும் வீடுகளில், அதன் ஒவ்வொரு சீரியலும் தினசரி சடங்கு போல மாறிவிட்டது. அந்த வகையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க, சன் டிவி 3 புதிய பக்தி சீரியல்களைக் களமிறக்க உள்ளது.
புதிதாய் வரும் சீரியல்களின் சிறப்பு அம்சங்கள்:
1.நாகமணி: இந்தி தொலைக்காட்சியில் பெரும் வெற்றிபெற்ற தொடர் இது. பரபரப்பான திருப்பங்களுடன், பாம்பு கதைகளுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை இலக்கு வைத்து, இந்தத் தொடர் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வருகிறது. இரவு நேர ஸ்லாட்டில் ஒளிபரப்பாக உள்ள இந்தத் தொடர், நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2.பராசக்தி: 'மிஸ்டர் மனைவி' சீரியல் மூலம் பிரபலமான ஜோடி, இந்த 'பராசக்தி' சீரியலில் மீண்டும் இணைகிறார்கள். இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானது என்பதால், இந்தத் தொடருக்கு ஒரு ஆரம்ப எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குடும்பக் கதைக்களத்துடன், உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த சீரியல் உருவாக்கப்பட்டுள்ளது.
3. வீர அனுமான்: ஆன்மிகத் தொடர்கள் இந்திய குடும்பங்களில் எப்போதும் தனி ஈர்ப்பைக் கொண்டுள்ளன. அந்த வரிசையில், ஹிந்தியில் வெளியான 'வீர அனுமான்' தொடர் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாக உள்ளது. அனுமனின் வீரதீர சாகசங்களும், பக்தியும் நிறைந்த இக்கதை, ஆன்மிகம் மற்றும் புராணக் கதைகளை விரும்பும் பார்வையாளர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும்.
இந்த 3 புதிய சீரியல்களும், சன் டிவியின் தற்போதைய தொடர் வரிசையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான குடும்பக் கதைகளைத் தாண்டி, திகில், பக்தி, காதல் எனப் பல சுவைகளை கலந்துகட்டி, பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ப அலைவரிசையை உருவாக்க சன் டிவி தயாராக உள்ளது. இந்த சீரியல்கள் பார்வையாளர்களை எப்படி கவரப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.