சீரியல் டூ சினிமா; கோடியில் சம்பளம் வாங்கும் இந்த நடிகை, இந்திய பிரம்மாண்ட பட ஹீரோயின்; யார் தெரியுமா?

சீரியலில் இருந்து சினிமாவிற்கு செல்வது இப்போது மிகவும் பொதுவானதாகிவிட்டது. ஆனால் முதல் படத்திலேயே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளார் இந்த நடிகை. அது யாரு என்று பார்க்கலாம்.

சீரியலில் இருந்து சினிமாவிற்கு செல்வது இப்போது மிகவும் பொதுவானதாகிவிட்டது. ஆனால் முதல் படத்திலேயே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளார் இந்த நடிகை. அது யாரு என்று பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-08-31 181658

ஒரு காலத்தில் தொலைக்காட்சிச் சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் நன்கு இடம்பிடித்திருந்த மிருணாள் தாகூர், தனது தொழில்முறை பயணத்தை மெதுவாகவே ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சின்னதாச்சின்னதான படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், தனது திறமை மற்றும் தொடர்ச்சியான முயற்சியின் மூலம் இன்று இந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்.

Advertisment

மிருணாள் தாகூரின் கலையின் பயணம் "கும்கும் பாக்யா" என்ற ஹிந்தி சீரியல் மூலம் ஆரம்பமானது. இந்த தொடர் மூலம் தான் பெரும் பிரபலமடைந்தார். தனது தொலைக்காட்சி பயணத்துக்குப் பிறகு, படத் துறையில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை நோக்கி வரத் தொடங்கின. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர், 2014ஆம் ஆண்டு வெளிவந்த மராத்தி திரைப்படமான "விட்டி தண்டு" மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

Sita Ram heroine mrunal thakur celebrates her birthday today

பின்னர் பாலிவுட் திரையுலகில் இடம் பிடிக்க துடித்த மிருணாள், "லவ் சோனியா", "சூப்பர் 30" (ஹ்ரித்திக் ரோஷனுடன்), "ஜெர்சி" (ஷாஹித் கபூருடன்) போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ஹிந்தி சினிமா ரசிகர்களிடையே தன்னிச்சையான இடத்தைப் பெற்றார்.

Advertisment
Advertisements

இந்த வெற்றியின் தொடர்ச்சி, 2022-ஆம் ஆண்டு வெளியான தெலுங்குப் படமான "சீதா ராமம்" மூலம் தென்னிந்திய சினிமாவிலும் தனது அறிமுகத்தை சிறப்பாக பதித்தார். துல்கர் சல்மானுடன் நடித்த அந்த படம், மிருணாளின் திரைப்பயணத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அவரது நேர்த்தியான நடிப்பும், அழகிய தோற்றமும் தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், தென்னிந்திய சினிமா தயாரிப்பாளர்களிடமும் பரவலான கவனத்தை ஈர்த்தது.

இதனைத் தொடர்ந்து, மிருணாளுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது, அவர் நடிக்கவிருக்கும்  திரைப்படங்களின் எண்ணிக்கை 5ஐத் தாண்டியுள்ளது. இந்த வளர்ச்சியின் மத்தியில், அவரது சொத்து மதிப்பு ரூ. 40 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது. மேலும், ஒரு திரைப்படத்திற்காக அவர் பெறும் சம்பளம் சுமார் ரூ. 2 கோடி வரை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடக்கத்தில் சிறிய சீரியல் நடிகையாக இருந்த மிருணாள் தாகூர், இன்று பன்முகத் திறமையுடன் பல்வேறு மொழிகளில் நடித்து, இந்திய திரைப்பட உலகில் தனக்கென ஒரு முத்திரையை ஏற்படுத்தியுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: