குட்டி இல்ல, நான் வெட்டி ஜமீன்தார்; வாலி பெயர் வந்தது இப்படி தான்; கவிஞர் விளக்கம்!

இவருக்கு வாலி என்கிற பெயர் எப்படி வந்தது என்பதற்கு பின்னால் சுவாரஸ்ய கதை இருக்கிறது. வாலியின் நிஜப்பெயர் சீனிவாசன் ரங்க ராஜன். வாலி பள்ளியில் படிக்கும்போதே ஓவியத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

இவருக்கு வாலி என்கிற பெயர் எப்படி வந்தது என்பதற்கு பின்னால் சுவாரஸ்ய கதை இருக்கிறது. வாலியின் நிஜப்பெயர் சீனிவாசன் ரங்க ராஜன். வாலி பள்ளியில் படிக்கும்போதே ஓவியத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

author-image
WebDesk
New Update
Vaali Poet1

குட்டி இல்ல, நான் வெட்டி ஜமீன்தார்; வாலி பெயர் வந்தது இப்படி தான்; கவிஞர் விளக்கம்!

தமிழ் சினிமாவில் கண்ணதாசனுக்கு நிகராக வளர்ந்த கவிஞர் மற்றும் பாடலாசிரியர் கவிஞர் வாலிதான். தன்னையும், தமிழையும் மட்டுமே நம்பி சினிமாவில் வளர்ந்தவர். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பல பாடல்களை வாலி எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர் படங்களில் அவரை புரமோட் செய்வது போல ஒரு பாடல் கண்டிப்பாக இருக்கும். அது எல்லாமே வாலி எழுதியதுதான். 3 எழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால், ஏன் என்ற கேள்வி உள்ளிட்ட பாடல்கள் அவர் எழுதியதுதான். அதேபோல், எம்.ஜி.ஆர் படங்களில் பல காதல் பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய பல பாடல்கள் ரசிகர்கள் கண்ணதாசன் எழுதியது என்றே ரசிகர்கள் நினைத்தார்கள். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான பாடலாசிரியராகவும் வாலி இருந்தார்.

Advertisment

எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் மட்டுமில்லாமல் ரஜினி,கமல், விஜய், அஜித், தனுஷ், சிம்பு, எஸ்.ஜே சூர்யா உள்ளிட பல நடிகர்களுக்கும் அவர் பாடல்களை எழுதி அசத்தியுள்ளார். அதனால்தான் வாலிப கவிஞர் வாலி என்கிற பட்டம் அவருக்கு கிடைத்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் காலம் துவங்கி இளையாராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா என பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதியவர்.

இவருக்கு வாலி என்கிற பெயர் எப்படி வந்தது என்பதற்கு பின்னால் சுவாரஸ்ய கதை இருக்கிறது. வாலியின் நிஜப்பெயர் சீனிவாசன் ரங்க ராஜன். வாலி பள்ளியில் படிக்கும்போதே ஓவியத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் நிறைய ஓவியங்களை வரைந்திருக்கிறார். பிரபலமான அரசியல் தலைவர்கள் மற்றும் சங்கீத வித்வான்கள் என யார் வந்தாலும், அவர்களை வரைந்து அந்த ஓவியத்தை அவர்களிடம் கொடுக்கும் பழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது.

அந்தக் காலகட்டத்தில், ஆனந்த விகடன் பத்திரிகையில் மாலி என்கிற ஒரு பெரிய ஓவியர் இருந்தார். மாலி அவர்களின் ஓவியங்கள் மிகவும் பிரபலம். வாலியின் ஓவியத் திறமையைப் பார்த்த அவரது நண்பர் ஒருவர், "மாலி என்று ஒரு பெரிய ஓவியர் இருக்கிறார், அதனால் நீ வாலி என வைத்துக்கொள்" என்று அறிவுறுத்தியுள்ளார். நண்பரின் இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட சீனிவாசன் ரங்க ராஜன், தனது பெயரை "வாலி" என்று வைத்துக்கொண்டார். இந்த தகவலை வாலியே வசந்த் டிவியில் நடத்தப்பட்ட பேட்டியில் எஸ்.ஜே.சூரியாவிடம் தெரிவித்துள்ளார். பின்னர், இந்த "வாலி" என்ற பெயரே தமிழ் இலக்கியம் மற்றும் திரையுலகில் ஒரு பிரம்மாண்டமான அடையாளமாக நிலைபெற்றுவிட்டது.

Advertisment
Advertisements

https://www.facebook.com/share/v/1FXRtgSZcb/

Sj surya

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: