சிவகார்த்திகேயன் நேற்று (பிப்.18) தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். திறமையும், உழைப்பும் நம்மை உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதற்கு தமிழ் சினிமாவின் உதாரணங்களில் இவரும் ஒருவர்.
சிவகார்த்திகேயன்’ கல்லூரி கல்ச்சர் விழாக்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு பழைய வீடியோவில், அவர் தமிழ் சூப்பர் ஸ்டார்களை மிமிக்ரி செய்வதைக் காணலாம். சாலமன் பாப்பையா தலைமையில் வகுப்பறையில் தமிழ் சூப்பர் ஸ்டார்கள்’ எப்படி பதிலளித்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்து’ அவர் மிமிக்ரி செய்கிறார்.
வினு சக்கரவர்த்தி, பிரகாஷ் ராஜ், ரகுவரன் போன்ற வில்லன்கள் முதல் ஹீரோக்கள் விஜயகாந்த், தனுஷ், அஜித் மற்றும் விஜய் வரை, சிவகார்த்திகேயன் தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வைப் பயன்படுத்தி அனைவரையும் வேடிக்கையாக ட்ரோல் செய்கிறார்.
வீடியோவின் கடைசிப் பகுதியில் சிவகார்த்திகேயன்’ விஜய் போல மிமிக் செய்து நடிக்கிறார். சாலமனின் குரலில், “முதலில் ஒரு திறமையான இயக்குநரை சந்தித்து நல்ல கதையைக் கேளுங்கள்” என்று விஜய்யிடம் சொல்கிறார். வில்லு படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த பின்னணியில் இந்த நடிப்பு நடந்ததாகத் தெரிகிறது, இது எப்போதும் அமைதியாக இருக்கும் விஜய்யை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் உணர்ச்சிவசப்படச் செய்தது.
கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு, கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக சிவகார்த்திகேயன் தொலைக்காட்சி துறையில் நுழைந்தார். தனது தனித்துவமான நகைச்சுவை திறமைக்காக பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளராக ஆனார். பின்னர் 2012 இல் மெரினா படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் ஒருவராக இருக்கிறார். பாடலாசிரியராகவும் புகழ் பெற்று வருகிறார். விஜய்யின் வரவிருக்கும் பீஸ்ட் படத்தில் அவர் எழுதிய அரபிக் குத்து பாடல் இப்போது பயங்கர வைரலாகியள்ளது.
கல்லூரி விழாக்களில் விஜய்யை ட்ரோல் செய்தது முதல் பெரிய பட்ஜெட் படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றுவது வரை சிவகார்த்திகேயனின் கேரியர் முழுவதுமாக வந்துள்ளது.
பீஸ்ட் படத்தை இயக்கும் நெல்சன் தில்ப்குமார் எழுதி இயக்கிய சிவகார்த்திகேயனின் கடைசிப் படமான டாக்டர், பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெற்றது.
இப்போது சிவகார்த்திகேயன் டான் மற்றும் அயலான் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். விரைவில் ரங்கூன் புகழ் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் படப்பிடிப்பில் இணையவுள்ளார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“