சன் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான சீரியல் சுந்தரி விரைவில் முடிவடைய உள்ளது. கதாநாயகியாக உள்ள கேப்ரியல்லா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து சின்னத்திரையில் நடித்தார்.
நயன்தாரா நடித்த ஐரா என்ற படம் மூலம் சினிமாவிலும் கேப்ரியல்லா நடித்தார். இதைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு சன் டி.வியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்தார். சுந்தரி சீ கதாபாத்திரத்தில் நடித்தார், கிராமத்து பின்னணியில் வளரும் சுந்தரி ஐ.ஏ.எஸ் ஆவதை கனவாக கொண்டிருந்தார்.
இதற்கிடையில் திருமணம், நகரத்திற்கு வருவது கணவர் ஏமாற்றுவது என கதை நகர்ந்தது. தொடர்ந்து விடாமுயற்சியில் சுந்தரி ஐ.ஏ.எஸ் ஆகிறார். இந்த தொடருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து சுந்தரி ஐ.ஏ.எஸ் ஆகி அங்கு ஏற்படும் பிரச்சனை, அதை சமாளிப்பது என இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், இந்த நாடகம் விரைவில் முடிவடைய உள்ளது. சுந்தரி நாடகம் முடிவதாக, கடைசி நாள் சூட்டிங் புகைப்படங்களை கேப்ரியல்லா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதோடு மற்றொரு மகிழ்ச்சி செய்தியாக கேப்ரியல்லா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சுந்தரி சீரியல் இதன் காரணமாக தான் முடிவுக்கு வருகிறாதா என்றும் கேட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“