விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஜோடி ஜூனியர்' என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் நடிகை கேப்ரியல்லா. டான்ஸராக இருந்த கேப்ரியல்லா பின்னர் சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.
3, அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். தொடர்ந்து ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடரில் முன்னணி நாயகியாக அறிமுகம் ஆகி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
இதன் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அந்த சீரியல் முடிவடையவே சன் டி.வி-ல் ப்ரைம் டைமில் நுழைந்தார். சன் டி.வியில் மருமகள் என்ற புதிய சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், அந்த சீரியலில் வரும் சண்டை காட்சிக்காக பறந்து பறந்து சண்டை போடும் வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பாவாடை தாவணி அணிந்து முகமூடி அணிந்திருக்கும் நபர்களிடம் சண்டை போடுவது போல் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இதை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பலரும் இவரது முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“