Gabriella Sellus Tamil News: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களுள் ‘சுந்தரி’ சீரியலும் ஒன்று. தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கருப்பாக உள்ள சுந்தரியை மையமாக கொண்டு கதைமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் நடிகை ‘கேப்ரியல்லா செல்லஸ்’ நடித்து வருகிறார்.

டிக்டோக் பிரபலமாக வலம் வந்த நடிகை கேப்ரியல்லா, கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த நடிகை நயன்தாராவின் “ஐரா” திரைப்படத்தில் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். தற்போது அவர் பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும், ஒரு மாடலாகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் அறியப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் 6.1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நடிகை கேப்ரியல்லாவை (ஃபாலோ செய்துள்ளார்) பின்தொடர்ந்துள்ளர். இதை உறுதிப்படுத்தியுள்ள கேப்ரியல்லா, “இது ரொம்ப பெரிய விஷயம் சார். இதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இன்ஸ்டாவில் 64 பேரை மட்டுமே பின்தொடர்கிறார். அதில் நடிகை கேப்ரியல்லா செல்லஸும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.
தற்போது சுந்தரி சீரியலில் பிசியாக நடித்து வரும் நடிகை கேப்ரியல்லா கடந்த ஆண்டு மே மாதத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியது.
‘முப்பில்லா தமிழே தாயே'(Moopilla Thamizhe Thaaye) என்ற பாடலுக்காக தன்னுடன் கேப்ரியல்லா பணியாற்றியுள்ளதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“