Advertisment

ராம் சரண் ஒன் மேன் ஷோ: சுவாரஸ்யம் குறைவான திரைக்கதை: கேம் சேஞ்சர் விமர்சனம்!

படத்தின் திரைக்கதை பல இடங்களில் தோய்வை சந்திக்கும்போது தமன் தனது இசையால் தூக்கிய நிறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Ram Charan Game Changer

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள நிலையில், இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா?

Advertisment

Read In English: Game Changer movie review: A riveting Ram Charan anchors a middling Shankar showreel that needed more upgrades

பொதுவாக இயக்குனர் ஷங்கரின் திரை வரலாற்றை பார்க்கும்போது அவரது படங்களில் வரும் ஹீரோக்கள், சமூகத்தில் உயர்ந்தவர்கள் இடத்தில் இருக்கமாட்டார்கள். அதற்கு பதிலாக, அவர் அவர்களை ராபின் ஹூட், தனது காதலுக்காக போராடும் இளம் காதலன், ஊழலை ஒழிக்க விரும்பும் பழைய புரட்சியாளர், முதலமைச்சராக மாறும் ஒரு பத்திரிகையாளர், சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய தனது தாய்நாட்டிற்குத் திரும்பும் ஒரு என்ஆர்ஐ, மற்றும் ஒரு ரோபோவாகவும் ஒரு சிறிய கால தொழில்முனைவோராக காட்டியிருப்பார். இவரது திரைப்படத்தில் ஹீரோக்கள் போலீஸ் அல்ல.

அதேபோல் ஷங்கர் இயக்கிய படங்கள்,  நாடு முழுவதும் தற்போதுவரை அலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தாலும், இப்போது அவர் ஃபீல்ட்அவுட் ஆகிவிட்டாரா என்ற கேள்வியை எழுப்புகிறது. இதற்கு கேம் சேஞ்சர் படத்தில் பல விஷயங்களை சொல்லலாம். ஒரு இளம் காதலன், தன் காதலை வெல்ல தன் அடிப்படை நடத்தையை மாற்றிக்கொண்டு வருகிறார். அவர் ஒரு சிறிய கால சீர்திருத்தவாதி மற்றும் ஒரு புரட்சியாளர், ஊழலை ஒழிக்க விரும்பும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியான ஹீரோ தேர்தல் அரசியலில் ஈடுபடுகிறார்.

Advertisment
Advertisement

கேம் சேஞ்சர்  அடிப்படையில் ஒரு நல்ல படமாக மாறும் என்ற நம்பிக்கையில் ஒன்றாக இணைக்கப்பட்ட பல நல்ல காட்சிகள் இருந்தலும், தனித்தனியாக, இந்த காட்சிகளுக்கு ஒரு நோக்க உணர்வு உள்ளது, ஆனால் இந்த காட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணையும்போது பெரிதாக கவனம் செலுத்தவில்லையே என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, படத்தில் ராம் சரணுக்கும், கியாரா அத்வானிக்கும் இடையிலான முழு உறவும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் கதை விரிவடையும் போது இவர்களுக்கு இடையில் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறது.

உண்மையில், கியாரா மற்றும் அஞ்சலி இருவருக்கும் படத்தில் அற்புதமான காட்சிகள் கிடைக்கின்றன, மேலும் படத்தில் ராம் சரண் நடித்த இரண்டு கேரக்டர்களுக்கும், பலமான வசனங்கள் இருக்கின்றன. ஷங்கர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் ஒரு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் தான் இருக்கும். ஆனால் இந்த படத்தில், தீபிகா (கியாரா அத்வானி) ராம் நந்தனை (ராம்சரண்) ஐபிஎஸ் அதிகாரியாக மாற வேண்டாம் என்று கூறுகிறார், ஏனெனில் அவரது கோபம் நீதிக்கு புறம்பான கொலைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் தான். ஆனால், ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக, ராமின் செயல்களும் உடனடியாக பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கும். இதற்கு உதாரணமாக ஊழல் அதிகாரி தனது பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டு, அடுக்கு மண்டலத்தில் மாற்றப்படுகிறார். அதன்பிறகு ரேஷன் கடைகளைச் சுற்றியுள்ள ஊழலை ஒழிக்கிறார். 

அதேபோல் ஒரு ஒற்றை பாடலில் ஒரு முழு கிராம மக்களின் மனதையும் பணத்திற்காக வாக்களிக்க வேண்டாம் என்று மாற்றுகிறார். இந்த படத்தில் பல காட்சிகள் சுவாரஸ்யமானது தான். இவை நேர்மையான இருந்தாலும், இழிவான தன்மை சமூகத்தில் ஊடுருவியுள்ளது. நாம் கற்பனையான உலகத்தைப் பார்க்க விரும்புகிறோம், ஆனால் சமூகத்திற்கு சாத்தியமானதாகத் தோன்றும் ஒன்றை செய்ய முடியவில்லை. இங்கே, ஒரு மனிதன் எல்லாவற்றையும் மாற்றுகிறான், ஆனால் முரண்பாடு என்னவென்றால், ஷங்கர் இயக்கிய அனைத்து படங்களிலும் அவரது ஹீரோக்கள் தனி ஆளாக தொடர்ந்து சமூகத்தை மாற்றி வருகின்றனர், 1993, 1996, 1999 மற்றும் 2007 இல் கவனிக்கப்பட்ட அதே பிரச்சினையை 2025-லும் ஒழிக்கப் போகிறார்கள் என்றால், அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கேம் சேஞ்சரின் உண்மையான பிரச்சனை இதுதான், ஏனென்றால் ஷங்கரின் படத்தொகுப்பின் ஹேங்ஓவர் படத்தின் மீது அதிகமாக உள்ளது, மேலும் ஒரு துடிப்பான இளைஞரான ராம் சரண் கூட சிறிது நேரம் மட்டுமே அதைத் தாங்க முடியும். ஒரு ஐஏஎஸ் அதிகாரி மோபிதேவி (ஒப்பற்ற எஸ்.ஜே. சூர்யா) மற்றும் மாணிக்யம் (தனக்கு சிறந்ததைத் தகுதியானவர் என்பதை மறந்துவிடும் ஒரு வேடிக்கையான ஜெயராம்) ஆகியோரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஊழல் நிறைந்த அரசியல் வர்க்கத்தை எதிர்கொள்கிறார். அவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் உள்ளது, இந்த கதை படத்தின் அனைத்து முடிவுகளுக்கும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இருப்பினும், இந்த ஃப்ளாஷ்பேக் ராமுக்கும் மோபிதேவிக்கும் இடையிலான மோதல்களால் முடிவடைகிறது, ஆனால் வெறும் கூச்சல் போட்டியாகவும், அரசியல் ஆசாரம் மற்றும் இந்தியாவின் அதிகாரத்துவத்தின் அதிகாரங்கள் பற்றிய ஒரு சிறிய காட்சியாகவும் முடிந்துவிடுகிறது.

பல காட்சிகள் நீளம் என்ற பெயரில் இறுக்கமாக இருப்பது போல, ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்த முடியாத அளவுக்கு அவசரமாக உள்ளன. ப்ளாஷ்பேக் காட்சியில் ஒரு தியாகத்தின் அளவை நாம் புரிந்து கொள்வதற்கு முன்பே, நாம் நிகழ்காலத்திற்குத் திரும்பிச் செல்கிறோம். ராம் சரண் மற்றும் சூர்யா ஆகியோர் தங்கள் நடிப்புக்கு நியாயம் இல்லாத காட்சிகளுக்கு எல்லாம் கொடுப்பதைப் பார்ப்பது ஏமாற்றமளிக்கிறது. மேலும், அவர்களின் இழுபறி சண்டை மிக விரைவில் பெரிதாக எடுபடவில்லை.
அதிகமாக இருக்கக்கூடிய சில காட்சிகள் இருந்தபோதிலும், ஷங்கர் அதையெல்லாம் கட்டுப்படுத்துகிறார், இதனால் இந்த காட்சிகள் கதையின் ஆன்மாவை நொறுக்கும் அனுபவமாக இல்லாமல் வெறும் பின் சிந்தனைகளாகவே உணர்கின்றன. மேலும், நரேஷ் மற்றும் அச்சுத் குமார் போன்ற பல வலிமையான நடிகர்கள் படத்தில் வீணடிக்கப்படுகிறார்கள். மிகவும் சுவாரஸ்யமான கேரக்டர்களாக நடித்து வரும் சுனில் கூட இந்த படத்தில் வீணடிக்கப்பட்டுள்ளார். சுனிலின் விஷயத்தில் இந்தப் பண்பு ஏமாற்றமளிக்கிறது,

படத்தின் திரைக்கதையில், ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், கேம் சேஞ்சர் தொடர்ந்து நல்ல நடிப்பால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. அப்பன்னாவாகவும் ராம் நந்தனாகவும் ராம் சரண் அற்புதமாக நடிப்பை வெளிப்படுத்தியுளளார். அஞ்சலியும் தனக்கு அதிகம் கொடுக்காத ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் கொடுக்கிறார். மறுபுறம், ஒரு அற்புதமான உதட்டு ஒத்திசைவுடன் கியாரா, கேம் சேஞ்சரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தைப் பெறுகிறார், அவரது கேரக்டர் ஹீரோவுக்கு ஆதரவானர் என்று ஒதுக்கிவிட முடியாது. அவரும் தனது கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு, திரைக்கதையில் அவருககான முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறது.

மேலும், ராமின் 'குடும்பத்தினர்' வேறு எதையும் செய்ய முடியாமல் போவது வேதனையானது, அவரது அம்மா "நீ ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆகிவிட்டாய்... ஆனால் எப்போது திருமணம் செய்து கொள்வாய்?" என்று சொல்வதைத் தவிர, வேறு எதையும் செய்ய முடியாமல் போவது வேதனையானது! நடிப்பைத் தவிர, கேம் சேஞ்சரின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் தமன், அவரது இசையை நாம் ரசிக்காத இடங்களே இல்லை என்று சொல்லலாம். மேலும் திருருவின் ஒளிப்பதிவு ஷங்கரின் உலகத்திற்கு பொருந்துவது மட்டுமல்லாமல் அதை உயர்த்துகிறது.

படத்தின் திரைக்கதை பல இடங்களில் தடுமாறினாலும், தமன் நம்மை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வர சரியாக இசையமைத்துள்ளார். ஆனால் தமன், திருரு மற்றும் ராம் சரண் முன்னணி நடிகர்கள் கூட ஷங்கரின் எழுத்து அவரது திறமையின் முக்கியத்துவத்தை காட்டாதபோது மட்டுமே இவ்வளவு செய்ய முடியும், படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் கூட சத்தமாகவும் அதிகமாகவும் இருக்கிறது. ராம் சரண் ஹெலிகாப்டரில் இருந்து தொங்கியதையோ அல்லது ரயில் அவர்களை கடந்து செல்வதற்கு சற்று முன்பு தண்டவாளத்தில் கட்டப்பட்டிருந்த அடியாட்களின் கயிறுகளை அறுத்ததையோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பாடல்கள் ஒரு காட்சிக் காட்சியாக இருக்க வேண்டும், சில திரைப்பட தயாரிப்பாளர்களால் கூட முடிந்தவரை சிறப்பாகச் செய்ய முடியும் என்ற தனது நம்பிக்கையில் உறுதியாக இருக்கும் ஷங்கர், மற்ற காட்சிகளைப் பற்றிய தனது உள்ளுணர்வை நம்பவில்லை என்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. ஷங்கர் தனது முந்தைய படங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார், உண்மையில், அனைத்து நோக்கங்களுக்காகவும், கேம் சேஞ்சரை அவரது ரீ-என்ட்ரி என்று அழைப்பது நியாயமானது. இருப்பினும், இந்திய சினிமாவின் கேம் சேஞ்சர், தனது மிகப்பெரிய இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறார் - அவரது உள்ளுணர்வுடன் செல்வதா அல்லது அவர் அவர் சொல்ல நினைத்தது இன்றைய ரசிகர்களுக்கு சரியான முறையில் சென்றதா என்ற வகையில் யோசித்தால், இந்த விஷயத்தில், இருவரையும் மகிழ்விக்க விரும்பி, அவர் ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளார், இதற்காக நிறைய விஷயங்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் அது கேம் சேஞ்சர் அல்ல.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment