/indian-express-tamil/media/media_files/jxOARmQbNllQbmEm3uzc.jpg)
இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன், தான் இயக்கிய முதல் படமான 'கோழி கூவுது' குறித்து இசையமைப்பாளர் இளையராஜாவுடன் நடந்த சுவாரஸ்யமான உரையாடலை பற்றி டூரிங் டாக்கீஸ் சினிமா யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இளையராஜா மற்றும் கங்கை அமரன். இருவரும் சகோதரர்கள் என்பதும், இசையிலும், திரைத்துறையிலும் தனித்தனியே முத்திரை பதித்தவர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. கங்கை அமரன், இளையராஜாவின் தம்பியாக அறியப்பட்டாலும், தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். அவர் ஒரு சிறந்த பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இளையராஜாவுடன் இணைந்து பல வெற்றிப் பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார். 'கோழி கூவுது', 'கரகாட்டக்காரன்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கி இயக்குநராகவும் முத்திரை பதித்தார்.
இந்நிலையில் கங்கை அமரன் தனது 'கோழி கூவுது' திரைப்படம் பற்றி இளையராஜாவிடம் கூறியபோது, படத்தை பார்த்த இளையராஜா அதன் தலைப்பு பொருத்தமாக இல்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்த அனுபவத்தையும் கங்கை அமரன் பகிர்ந்துள்ளார். ஆனாலும், படத்தின் இயக்கம் பாரதிராஜாவின் பெயரில் வர வேண்டாம் என்றும், அதை சரி செய்யும் பொறுப்பு தன்னுடையது என்று இளையராஜாவிடம் கூறிய கங்கை அமரன் சில காட்சிகளை யோசித்து வைத்திருப்பதாகவும், அவற்றைச் சேர்த்தால் படம் சிறப்பாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல படத்திற்கு படம் பெயருக்கும் என்ன சம்மந்தம். வைரமுத்து என்று பெயர் வைத்துள்ளார் கவிஞர். அப்போ அவர் என்ன வைரம் மற்றும் முத்து வைத்துள்ளாரா என்று கலாய்த்து பேசியதாகவும் கூறினார். மேலும், கங்கை அமரன் "ஏதோ மோகம்" பாடலின் படப்பிடிப்பு அனுபவத்தைப் பற்றியும் பேசியுள்ளார். ஒரு வீடியோவைப் பார்த்தபோது, அந்தப் பாடல் முழுவதும் கருப்பு வெள்ளையில் வந்து, ஒரு மூலையிலிருந்து வண்ணம் வந்துகொண்டே இருப்பது போன்ற ஒரு காட்சியை படமாக்க ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அதை லேபில் செய்ய முடியாது என்று கூறப்பட்டதால், அந்த யோசனையை மாற்றிக்கொண்டு, வெறுமனே எடுத்த காட்சிகளை வைத்து பாடலை உருவாக்க வேண்டியதாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.