நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு படம்; மோடி கேரக்டரில் கருடன் பட நடிகர்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

பிரதமரின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றுப் படம் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமரின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றுப் படம் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Modi mh

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தில் மோடி கேரக்டரில் நடிக்க, தமிழில் கருடன் என்ற வெற்றிப்படத்தில் வில்லனாக நடித்த பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான 'மார்கோ' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நடிகர் உன்னி முகுந்தன் அடுத்ததாக 'மா வந்தே' என்ற புதிய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடி கேரக்டரில் நடிக்க உள்ளார். பிரதமரின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியானது.

இது குறித்து, உன்னி முகுந்தன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, "போர்களைத் தாண்டி ஒரு புரட்சியாக மாறும் ஒரு மனிதனின் கதை இது. மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். புகழ் மீண்டும் உயிர்ப்பிக்கப்படட்டும், மேலும் பிரகாசமான விஷயங்கள் காத்திருக்கின்றன. என்று பதிவிட்டிருந்தார். இப்படத்தை கிராந்தி குமார் சி. ஜி. இயக்குகிறார்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தகவலின்படி, மோடியின் குழந்தை பருவத்திலிருந்து அவரது தேசிய தலைமைப் பதவிக்கு உயர்ந்தது வரையிலான பயணத்தை இத்திரைப்படம் சித்தரிக்கும். "இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி ஜியின் கதாபாத்திரத்தில், இயக்குநர் கிராந்தி குமார் மற்றும் தயாரிப்பாளர் மா வந்தே மூவிஸ் நிறுவனத்தின் கீழ் நடிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்," என்று உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

மலையாளத் திரையுலகில் 'மெப்படியன்', 'மாலிகாபுரம்' மற்றும் 'மார்கோ' போன்ற ஆக்‌ஷன் திரைப்படங்களுக்காக உன்னி முகுந்தன் அறியப்படுகிறார். நிவின் பாலி நடித்த 'மைக்கேல்' திரைப்படத்தில் உன்னி முகுந்தன் நடித்த கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாக வெளிவந்த 'மார்கோ' திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுத் தந்தது.

பிரதமர் மோடியை முதன்முதலில் சந்தித்த அனுபவத்தையும் உன்னி முகுந்தன் பகிர்ந்து கொண்டார். "நான் அகமதாபாத்தில் வளர்ந்ததால், சிறுவயதில் அவரை எனது முதலமைச்சராகவே நான் அறிந்திருந்தேன். பல வருடங்கள் கழித்து, ஏப்ரல் 2023-ல் அவரை நேரில் சந்தித்தது என் மனதில் அழியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது," என்றார்.

மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது குறித்தும் விளக்கிய உன்னி முகுந்தன் அவரது அரசியல் பயணம் மிகவும் அசாதாரணமானது. ஆனால் இந்தப் படத்தில், ஒரு அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், அவருடைய அம்மாவுடனான ஆழ்ந்த பிணைப்பையும், அவரது குணத்தையும், மனதையும் வடிவமைத்த அவரது தாயையும் நாங்கள் ஆராய உள்ளோம்," என்று அவர் கூறினார்.

இப்படத்தின் துணைத்தலைப்பு (tagline) 'ஒரு தாயின் கீதம்' (An Anthem of a Mother) என்பதாகும். அடுத்ததாக உன்னி முகுந்தன் 'காந்தாரா ஜூனியர்' திரைப்படத்தில் நடிக்கிறார். மேலும், மிதுன் மேனுவேல் தாமஸ் எழுதிய கதைக்கு, அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள அவரது முதல் இயக்கத்தில் உருவாகும் ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: